Idhayam Matrimony

மெட்டாவுடன் இணைந்த தமிழக அரசு: இனி வாட்ஸ் - ஆப் மூலம் 50 சேவைகளை பெறலாம்

வெள்ளிக்கிழமை, 15 ஆகஸ்ட் 2025      தமிழகம்
PTR-2025-08-15

சென்னை, அரசு சேவைக்கான கட்டணங்களை செலுத்துவது உள்ளிட்ட 50 சேவைகளை, இனி தமிழக மக்கள் வாட்ஸ்-ஆப் மூலமே பெறும் வகையிலான ஒப்பந்தம் தமிழக அரசுக்கும் மெட்டா நிறுவனத்துக்கும் இடையே கையெழுத்தானது.

தமிழக அரசு, தன்னுடைய சேவைகளை மிக விரைவாக மக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது.

ஒரே ஒரு எண் மூலம் அணுகக்கூடிய இந்த சாட்பாட் உருவாக்கப்பட்டு, முதல் கட்டமாக மாநிலம் முழுவதும் உள்ள தமிழக மக்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் இருந்தும் தமிழக அரசு வழங்கும் 50 அத்தியாவசிய சேவைகளை பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளில் முதற்கட்டமாக இந்த சேவை வழங்கப்படும். அதிகபட்ச வார்த்தைகளை எழுதி மக்கள் தேவைகளை கேட்டறியலாம். அது மட்டுமல்லாமல் மின் மற்றும் குடிநீர் போன்ற கட்டணங்களை செலுத்துவது,வரி செலுத்துவது, மெட்ரோ டிக்கெட் எடுப்பது உள்ளிட்ட பல்வேறு சேவைகளை ஒரே சாட்பாட்டின் மூலம் பெற முடியும். ஒவ்வொரு சேவைக்கும் ஒவ்வொரு அலுவலகத்துக்கு மக்கள் அலைவதைத் தடுக்கும் வகையில் இந்த திட்டம் நடைமுறைக்கு வரவிருக்கிறது.

மக்களை மையமாகக் கொண்ட, வெளிப்படையான மற்றும் உறுதியான நிர்வாகத்தை உருவாக்குவதன் மூலம் இந்தியாவின் டிஜிட்டல் மாற்றத்தை வழிநடத்தும் தொலைநோக்குப் பார்வையை தமிழக அரசு கொண்டிருக்கிறது என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.

தற்போது மெட்டா நிறுவனத்துடன் கூட்டணி அமைத்திருப்பது, அந்தப் பயணத்தில் ஒரு முக்கியப் படியாகும். மாநிலத்தின் முக்கிய சேவைகளை, வாட்ஸ்அப்பின் எளிமை மற்றும் அதிகமானோர் பயன்படுத்தும் சமூக வலைத்தளத்துடன் இணைப்பதன் மூலம் தமிழக அரசு மக்களுக்கான சேவைகளை எளிமையாகக் கிடைப்பதுடன், அதில் தொழில்நுட்ப வளர்ச்சியும் ஒருங்கே ஏற்படும் வகையில் இந்த ஒப்பந்தம் அமைந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

 

இந்தியாவுக்கான மெட்டாவின் வணிகப் பிரிவு இயக்குநர் ரவி கார்க் கூறுகையில், வாட்ஸ்ஆப் என்பது இந்தியா முழுவதும் உள்ள மக்களுக்கு நன்கு தெரிந்த ஒரு சமூக வலைத்தளமாகும், மேலும் அதன் எளிமை மற்றும் பயன்பாட்டு வசதி அரசு சேவைகளுக்கு டிஜிட்டல் பயன்பாட்டை வழங்குவதற்கான சிறந்த தளமாக அமையும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து