முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துணை ஜனாதிபதி தேர்தல்: பா.ஜ.க. தலைவர்கள் இன்று முக்கிய முடிவு

சனிக்கிழமை, 16 ஆகஸ்ட் 2025      இந்தியா
Modi 2024-03-02

Source: provided

புதுடெல்லி : துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் உடல் நலனை கருத்தில் கொண்டு பதவி விலகுவதாக கடந்த மாதம் 21-ம் தேதி அறிவித்தார். அவரது ராஜினாமா உடனடியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதையடுத்து புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய தேர்தல் ஆணையம் நடவடிக்கைகளை தொடங்கியது. இதற்கான தேர்தல் அட்டவணை கடந்த 7-ம் தேதி வெளியிடப்பட்டது.

அதன்படி புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய செப்டம்பர் 9-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 7-ம் தேதி தொடங்கியது. வருகிற 21-ம் தேதி மனுதாக்கல் செய்ய கடைசி நாளாகும். மனுதாக்கலுக்கு இன்னும் 4 நாட்களே அவகாசம் உள்ளது. துணை ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளரை எதிர்த்து போட்டியிடப் போவதாக இந்தியா கூட்டணி தலைவர்கள் அறிவித்துள்ளனர். எனவே துணை ஜனாதிபதி தேர்தலில் ஆளும் கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையே நேரடி போட்டி உருவாகி உள்ளது.

இந்த நிலையில் புதிய துணை ஜனாதிபதி பதவிக்கு வேட்பாளர்களாக யார்-யார் நிறுத்தப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. பா.ஜ.க. தலை வர்கள் கடந்த 6-ம் தேதி இது தொடர்பாக கூடி ஆலோசனை நடத்தினார்கள். அப்போது துணை ஜனாதிபதியை தேர்வு செய்து அறிவிக்கும் அதிகாரத்தை பிரதமர் மோடிக்கும், பா.ஜ.க. தலைவர் நட்டாவுக்கும் வழங்குவதாக தீர்மானம் நிறைவேற்றினார்கள்.

இந்த நிலையில் இன்டியா கூட்டணி தலைவர்களும் டெல்லியில் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்கள். இன்டியா கூட்டணியில் உள்ள 12 கட்சி தலைவர்களுடன் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினார். அப்போது பா.ஜ.க. வேட்பாளரை எதிர்த்து களம் இறங்க தீர்மானிக்கப்பட்டது. இதனால் இன்டியா கூட்டணி வேட்பாளராக எதிர்க்கட்சி தலைவர்களில் யார் தேர்வு செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

இதற்கிடையே பா.ஜ.க.வின் பாராளுமன்ற குழு கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு டெல்லியில் உள்ள பா.ஜ.க. கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் அனைத்து எம்.பி.க்களும் பங்கேற்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்தில் துணை ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத்சிங் மற்றும் மூத்த தலைவர்கள் அனைவரும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். எனவே நாளை மாலை துணை ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக முக்கிய முடிவு கள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.

இன்று மாலை முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டாலும் பா.ஜ.க. வேட்பாளர் யார் என்பதை பிரதமர் மோடி எப்போது வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 18 அல்லது 19-ம் தேதி அவர் வேட்பாளர் விவரத்தை அறிவிப்பார் என்று டெல்லி வட்டாரத்தில் பேசப்படுகிறது.

பா.ஜ.க. வேட்பாளராக அறிவிக்கப்படப் போவது யார் என்பதை பார்த்து விட்டு இன்டிஆ கூட்டணி வேட்பாளரை அறிவிக்கலாம் என்று ராகுல் தீர்மானித்து இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதனால் துணை ஜனாதிபதி தேர்தலில் விறுவிறுப்பு ஏற்பட தொடங்கி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து