Idhayam Matrimony

ரெய்டுகள் மூலம் தி.மு.க. அமைச்சர்களை பயமுறுத்தலாம் என்று நினைகிறார்கள் : மத்திய அரசு மீது கனிமொழி குற்றச்சாட்டு

சனிக்கிழமை, 16 ஆகஸ்ட் 2025      தமிழகம்
Kanimozhi 2024-03-05

Source: provided

தூத்துக்குடி : தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ. பெரியசாமியின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் நேற்று அதிகாலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த நிலையில் தூத்துக்குடியில் அரசு விழாவில் பங்கேற்ற பின்பு தி.மு.க. துணை பொதுச் செயலாளரும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

பா.ஜ.க. அரசு ஒரு புறம் தேர்தல் கமிஷனை தனது கையில் வைத்துக்கொண்டு அவர்கள் உதவியோடு பல தாக்குதல்களை ஜனநாயகத்தின் மீது ஏவி விட்டு தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என துடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதே நேரத்தில் அவர்கள், வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ. ஆகியவற்றை எதிர்க்கட்சிகள் மீது தொடர்ந்து தாக்கக்கூடிய கருவிகளாக மாற்றி பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட ஒன்றுதான் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய சோதனை. தி.மு.க. இதை எதிர்கொள்ளும். நமது அமைச்சர் எத்தனையோ சிக்கல்களை கடந்து தி.மு.க.வுடன் உறுதுணையோடு நிற்கக் கூடியவர். அதனால் எந்த பயமுறுத்தலாலும் தி.மு.க. தலைவர்களை அச்சுறுத்த முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து