எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், தி.மு.க. எம்.பிக்கள் கட்சி பேதமின்றி அவருக்கு ஆதரவு தர வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
’மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். இதுவரை திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட அவர் நேற்று திருவண்ணாமலை மாவட்டத்திற்கு சென்றார். அதனை தொடர்ந்து நேற்று அவர் அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்து அவர், "இது ஒரு நற்செய்தி. தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் குடியரசு துணைத் தலைவரானால் அது தமிழ்நாடுக்கு பெருமை. சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு எனது வாழ்த்துகள். கட்சி பேதமின்றி தி.மு.க. எம்.பிக்கள் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் குடியரசு துணைத் தலைவராவதற்து தங்களது ஆதரவை தெரிவிக்க வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


