Idhayam Matrimony

3 நாள் பயணமாக ரஷ்யா செல்கிறார் ஜெய்சங்கர்

செவ்வாய்க்கிழமை, 19 ஆகஸ்ட் 2025      இந்தியா
Jaishankar 2023 06 08

புதுடெல்லி, ரஷ்யா செல்கிறார் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்.

ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்காக இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ளது. இதனால் இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர், ரஷ்யா சென்ற தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்து பேசினார். தொடர்ந்து, விளாடிமிர் புடின் விரைவில் இந்தியா வர உள்ளதாக தெரிவித்தார்.

இந்த நிலையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று ரஷ்யா செல்ல உள்ளார். 3 நாள் பயணமாக ரஷ்யா செல்லும் ஜெய்சங்கர், அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ராவை சந்தித்து பேச உள்ளார். அதைத் தொடர்ந்து, மாஸ்கோவில் நடைபெறும் இந்தியா-ரஷ்யா வணிக மன்றக் கூட்டத்தில் உரையாற்றுகிறார். அமெரிக்கா அதிக வரி விதித்துள்ள சூழ்நிலையில், ஜெய்சங்கரின் இந்த பயணம் முக்கியத்துவம் பெறுகிறது. மேலும், இந்த சந்திப்பின்போது உக்ரைனில் அமைதியைக் கொண்டுவர டிரம்ப் எடுக்கும் முயற்சிகள் குறித்து ஜெய்சங்கரும், செர்ஜி லாவ்ரோவும் விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து