எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
செயின்ட் லூயிஸ் : அமெரிக்காவில் நடைபெற்ற செஸ் போட்டியில் 3-வது சுற்றை டிரா செய்து குகேஷ் முடித்தார்.
அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் சின்க்பீல்டு கோப்பை செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் 3-வது சுற்றில் உலக சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷ், பிரேசிலின் சாமுவேல் சேவியனுடன் மோதினார். இதில் கருப்பு காய்களுடன் விளையாடிய குகேஷ் 44-வது நகர்த்தலின் போது ஆட்டத்தை டிராவில் முடித்தார்.
இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.பிரக்ஞானந்தா, உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் அப்துசத்தோரோவை எதிர்த்து விளையாடினார். இந்த ஆட்டம் 46-வது நகர்த்தலின் போது டிரா ஆனது. அமெரிக்காவின் பேபியானோ கருனா, 46-வது நகர்த்தலின் போது பிரான்ஸின் அலிரேசா பிரோஸ்ஜாவை தோற்கடித்தார்.
அமெரிக்காவின் லெவோன் அரோனியன், பிரான்ஸின் மாக்சிம் வச்சியர் லாக்ரேவ் மோதிய ஆட்டம் 73-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. அமெரிக்காவின் வெஸ்லி சோ, போலந்தின் டுடா ஜான் கிரிஸ்டோப் மோதிய ஆட்டம் 32-வது நகர்த்தலின் போது டிரா ஆனது.
3 சுற்றுகளின் முடிவில் பேபியானோ கருனா, லெவோன் அரோனியன், பிரக்ஞானந்தா ஆகியோர் தலா 2 புள்ளிகளுடன் முதல் 3 இடங்களில் உள்ளனர். வெஸ்லி சோ, மாக்சிம் வச்சியர் லாக்ரேவ் சாமுவேல் சேவியன், அலிரேசா ஃபிரோஸ்ஜா, குகேஷ் ஆகியோர் தலா 1.5 புள்ளிகளுடன் முறையே 4 முதல் 8-வது இடங்களில் உள்ளனர். டுடா ஜான் கிரிஸ்டோப் ஒரு புள்ளியுடன் 9-வது இடத்திலும், நோடிர்பெக் அப்துசத்தோரோவ் 0.5 புள்ளிகளுடன் கடைசி இடத்திலும் உள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


