எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, முதல்வரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் முன்னிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (ஆக.26) தொடங்கி வைத்தார்.
சென்னை - மயிலாப்பூர், புனித சூசையப்பர் தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற இந்த விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், தமிழகத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர். காலை 8.30 மணி அளவில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் மாணவர்களுக்கு உணவு பரிமாறி முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விரிவு செய்து வைத்தனர். பின்னர் நடைபெற்ற விழாவில் முதல்வர் ஸ்டாலின், பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் உள்ளிட்டோர் பேசினர்.
முன்னதாக, முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் சிறப்பை குறிப்பிடும் வகையில் சிறப்பு வீடியோ ஒன்றை தமிழக அரசு வெளியிட்டது. சுமார் 3.43 நிமிடங்கள் ரன் டைம் கொண்ட இந்த வீடியோவில் இந்த திட்டம் தொடங்கப்பட்டதற்கான காரணம், தொடங்கப்பட்ட நாள், அடுத்தடுத்த விரிவாக்கம், அதன் மூலம் மாணவர்கள் பெற்ற பலன் உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டுள்ளிது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


