எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, நீதிபதிகள் ஆலோக் ஆராதே, விபுல் எம்.பஞ்சோலி ஆகிய இருவரையும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசுக்கு கொலீஜியம் பரிந்துரை அளித்துள்ளது.
தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் சூர்ய காந்த், விக்ரம் நாத், ஜே.கே.மகேஸ்வரி, பி.வி.நாகரத்னா ஆகிய 5 உறுப்பினர்களை கொண்ட சுப்ரீம் கோர்ட் கொலீஜியம் கூடி ஆலோசனை நடத்தியது. இதில் நீதிபதிகள் ஆலோக் ஆராதே, விபுல் எம்.பஞ்சோலி ஆகிய இருவரையும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசுக்கு பரிந்துரை அளித்துள்ளது. இந்தப் பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தால், குடியரசுத் தலைவர், இருவரையும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக நியமித்து உத்தரவிடுவார்.
சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக விபுல் எம்.பஞ்சோலி நியமிக்கப்பட்டால் அவர் 2031 மே மாதம் முதல் 16 மாதங்களுக்கு தலைமை நீதிபதியாக பதவி வகிப்பார். 1964-ம் ஆண்டு பிறந்த நீதிபதி ஆராதே, மத்தியபிரதேச உயர் நீதிமன்றத்தில் கடந்த 2009 டிசம்பரில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்தார்.
குஜராத் மாநிலத்தை சேர்ந்த நீதிபதி பஞ்சோலி 7 ஆண்டுகள் உதவி அரசு வழக்கறிஞராகவும் கூடுதல் அரசு வழக்கறிஞராகவும் பணியாற்றினார். 2014 அக்டோபரில் குஜராத் உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாகவும் 2016 ஜூன் மாதம் நிரந்தர நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


