Idhayam Matrimony

பதக்கம் வாங்க மறுத்த அமைச்சரின் மகன்: பெருந்தன்மையாக பேசிய அண்ணாமலை

செவ்வாய்க்கிழமை, 26 ஆகஸ்ட் 2025      தமிழகம்
Annamalai-1 2025-08-26

Source: provided

புதுக்கோட்டை : பதக்கம் வாங்க மறுத்த அமைச்சரின் மகனை பெருந்தன்மையாக அண்ணாமலை பேசினார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவாரக்குடிபட்டியில் 51-வது மாநில அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டிக்கு பா.ஜ.க. முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களை கழுத்தில் அணிவித்தார். அப்போது அண்ணாமலையிடமிருந்து பதக்கத்தை கழுத்தில் வாங்க மறுத்த அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் மகன் சூரிய ராஜபாலு, அதை கையில் பெற்றுக் கொண்டு புகைப்படத்திற்கு மட்டும் நின்றதால் அந்த இடத்தில சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், டி.ஆர்.பி. ராஜா மகனின் இந்த செயலுக்கு பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை கண்டனம் தெரிவித்தார். இதனிடையே இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்த அண்ணாமலை, யார் கயல் பதக்கம் வாங்க வேண்டும் என்றும் வாங்க வேண்டாம் என்றும் நினைப்பது அவரவர் விருப்பம். என் கையில் பதக்கம் வாங்கவில்லை, வாங்க மறுத்துவிட்டார் என்பது முக்கியமில்கலை. டி.ஆர்.பி. ராஜாவின் மகன் எங்கிருந்தாலும் சிறப்பாக இருக்க வேண்டும். இந்த துறையில் சாதனை செய்யவேண்டும். பெரிய மனிதராக வளர வேண்டுமென மனதார வாழ்த்துகிறேன்" என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து