எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஜம்மு காஷ்மீர் : ஜம்மு காஷ்மீர் அரசு அலுவலகங்களில் வாட்ஸ்அப் பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் அரசு அலுவலகங்களில் பென் டிரைவ்கள் மற்றும் வாட்ஸ்அப் பயன்படுத்துவதை தடை செய்யப்பட்டது. அரசாங்க தகவல்களைப் பாதுகாக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது. இதன் மூலம், பென் டிரைவ்களை இனி அரசாங்க நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தக்கூடாது. அதிகாரப்பூர்வ தகவல்களை வாட்ஸ்அப் அல்லது பிற சமூக ஊடக தளங்களில் பகிரக்கூடாது. பதிலாக தரவு பகிர்வுக்கு கிளவுட் அடிப்படையிலான GovDrive தளத்தை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே இணங்கத் தவறினால் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்தது.
மே மாதம் நடைபெற்ற ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, ஜம்மு காஷ்மீரில் மின் துறை தொடர்பான பல அதிகாரப்பூர்வ வலைத்தளங்கள் சைபர் தாக்குதல்களுக்கு ஆளான நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. முன்னதாக மத்திய மின்சார அமைச்சர் மனோகர் லால் கட்டார், இந்தியா முழுவதும் மின்சாரத் துறை சுமார் இரண்டு லட்சம் சைபர் தாக்குதல்களை எதிர்கொண்டதாகவும் அவை வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


