முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறுகுறு தொழில்களை அழித்துவிட்டு இந்திய பொருட்களை வாங்க சொன்னால் எப்படி? - காங்கிரஸ் விமர்சனம்

செவ்வாய்க்கிழமை, 26 ஆகஸ்ட் 2025      இந்தியா
Cong 2024-04-21

Source: provided

டெல்லி : சிறுகுறு தொழில்களை அறித்துவிட்டு இந்திய பொருட்களை வாங்க சொன்னால் எப்படி என்று காங்கிரஸ் விமர்சித்தள்ளது.

ரஷியாவிடம் எண்ணெய் வாங்கி உக்ரைன் போரை ஊக்குவிப்பதாக குற்றம்சாட்டி இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா அபராதமாக விதித்த 25 சதவீத வரி இன்று முதல் அமலுக்கு வர உள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க சுங்கத் துறை அதிகாரபூர்வ அறிவிப்பை நேற்று வெளியிட்டது.

இதனால், ஏற்கனவே உள்ள 25 சதவீதம் வரியுடன் சேர்த்து இந்தியப் பொருட்களுக்கு விதிக்கப்படும் மொத்த வரி 50% ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, ரத்தினம், நகைகள், ஜவுளி, ஆடைகள், இறால் போன்ற இந்தியாவின் முக்கிய ஏற்றுமதித் துறைகளை கடுமையாகப் பாதிக்கும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்தார். இதற்கிடையே நேற்று  முன்தினம் குஜராத்தில் பேசிய பிரதமர் மோடி, "விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்கள், சிறு தொழில்களின் நலன்தான் மிக முக்கியமானவை. அமெரிக்காவின் மிரட்டலால், நமக்கு அழுத்தம் அதிகரிக்கலாம். ஆனால், அனைத்தையும் நாம் தாங்கிக் கொள்வோம்.

நான் அனைவரும் இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும் என்ற மந்திரத்தை பின்பற்ற வேண்டும். வணிகர்கள் தங்கள் கடைகளுக்கு வெளியே இந்திய பொருட்களை மட்டுமே விற்பனை செய்வதாக ஒரு பெரிய பலகையை வைத்திருக்க வேண்டும்" என்று கூறினார். இந்நிலையில் அமெரிக்காவின் வரிவிதிப்பு, விசித்திரமான இந்திய வெளியுறவு கொள்கையின் விளைவு என காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

வரிவிதிப்பு மற்றும் இந்திய பொருட்களை வாங்குவது தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா, "நாம் கடைப்பிடித்து வரும் மிகவும் விசித்திரமான வெளியுறவுக் கொள்கையின் விளைவுகளை நாம் அனைவரும் இப்போது பார்த்து வருகிறோம். இதற்கு அரசாங்கம் எவ்வாறு பதிலளிக்கும் என்பதைப் பார்ப்போம். வெறும் அலங்கார பேச்சுக்கள் மட்டும் போதாது. நீங்கள் உங்கள் பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. மற்றும் பொருளாதார கொள்கைகள் மூலம் சிறு குறு தொழில் துறையை முற்றிலுமாக அழித்துவிட்டீர்கள். அப்படி இருக்கும்போது மக்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை எவ்வாறு வாங்குவார்கள். உற்பத்தி இல்லாத இடத்தில், பொருட்களை எப்படி வாங்க சொல்ல முடியும் என்று வினவியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து