எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து அஸ்வின் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்த்திரன் அஸ்வின் ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் . கடந்த ஐ.பி.எல். தொடரில் சென்னை அணிக்காக அஸ்வின் விளையாடி இருந்தார் .இது தொடர்பாக அஸ்வின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ஒவ்வொரு முடிவும் ஒரு புதிய தொடக்கத்தைக் கொண்டிருக்கும் என்று கூறுகிறார்கள், ஒரு ஐ.பி.எல். கிரிக்கெட் வீரராக எனது நேரம் நேற்று முடிவடைகிறது, ஆனால் பல்வேறு லீக்குகளைச் சுற்றியுள்ள விளையாட்டை ஆராய்பவராக எனது நேரம் நேற்று தொடங்குகிறது.
பல ஆண்டுகளாக அனைத்து அற்புதமான நினைவுகள் மற்றும் உறவுகளுக்கும், மிக முக்கியமாக ஐ.பி.எல். நிர்வாகம் மற்றும் பி.சி.சி.ஐக்கும் , இதுவரை எனக்குக் ஆதரவு அளித்த அனைத்து அணி உரிமையாளர்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். எனக்கு முன்னால் உள்ளதை அனுபவித்து, சிறப்பாகப் பயன்படுத்த ஆவலுடன் காத்திருக்கிறேன். என தெரிவித்துள்ளார். அஸ்வினின் திடீர் ஓய்வு முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பிற நாடுகளில் நடைபெறும் லீக் போட்டிகளில் விளையாட உள்ளதாக அஸ்வின் அறிவித்துள்ளார். இதுவரை அஸ்வின் ஐ.பி.எல். தொடரில் 221 போட்டிகளில் விளையாடி 187 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். பேட்டிங்கில் 98 இன்னிங்சில் 833 ரன்கள் எடுத்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


