எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
முசாபர்பூர் : 'பா.ஜ.க. எப்படி தேர்தல்களை கேலிக்கூத்தாக்கிவிட்டது என்பதை ராகுல் வெளிச்சம் போட்டு காட்டிவிட்டார். மக்களின் வாக்குரிமையை பறித்த பா.ஜ.க.வின் அதிகாரத்தை மக்கள் பறிப்பார்கள்' என பீகாரில் வாக்காளர் அதிகார யாத்திரை பேரணியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
ராகுல் யாத்திரை....
தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பீகாரில் 1,300 கிலோ மீட்டர் 'வாக்காளர் அதிகார யாத்திரை'யை ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிறார்.
16 நாட்கள் தோடர்...
ஆகஸ்ட் 17-ம் தேதி சசாரமில் இருந்து தொடங்கிய 16 நாட்கள் தொடர் யாத்திரை, செப்டம்பர் 1-ம் தேதி பாட்னாவில் ஒரு பேரணியுடன் முடிவடைகிறது. இந்த யாத்திரையில் ஆர்.ஜே.டி. தலைவர் தேஜஸ்வி யாதவ், சி.பி.எம்.எல். தலைவர்கள் உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும் கலந்து கொண்டுள்ளனர்.
முசாபர்பூரில் முதல்வர்...
நேற்று முசாபர்பூரில் நடைபெற்ற யாத்திரையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டார். அவர், ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோருடன் திறந்த காரில் சென்று மக்களை சந்தித்தார்.
ஆதரளிக்கவே நான்...
இதனை தொடர்ந்து முசாபர்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், ‘ பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் வாக்கு திருட்டுக்கு எதிராக என் சகோதரர்களுக்கு ஆதரளிக்கவே நான் வந்துள்ளேன். வாக்கு திருட்டை ராகுல் காந்தி வெளிக்கொண்டு வந்துள்ளார். இதற்கு தலைமை தேர்தல் ஆணையரால் முறையாக பதில் சொல்ல முடியவில்லை.
அவருக்கு பயம் இல்லை...
ஆனால், ராகுல் காந்தி உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும், மன்னிப்பு கேட்க வேண்டுமென தலைமை தேர்தல் ஆணையர் சொல்கிறார். இதற்கெல்லாம் ராகுல் காந்தி பயப்படுவாரா?. ராகுல் காந்தியின் வார்த்தைகளிலும், கண்களிலும் எப்போதும் பயம் இருக்காது.
மக்கள் பறிப்பார்கள்...
ராகுல் காந்தி அரசியலுக்காக பேச மாட்டார், உண்மையை கவனத்தோடு பேசுவார். பா.ஜ.க. எப்படி தேர்தல்களை கேலிக்கூத்தாக்கிவிட்டது என்பதை ராகுல் வெளிச்சம் போட்டு காட்டிவிட்டார். அந்த ஆத்திரத்தில்தான் பா.ஜ.க. இப்படி நடந்துகொள்கிறது. மக்களின் வாக்குரிமையை பறித்த பா.ஜ.க.வின் அதிகாரத்தை மக்கள் பறிப்பார்கள்.
ஜனநாயக படுகொலை...
பா.ஜ.க. கூட்டணி தோற்றுவிடும் என்ற பயத்தில் மக்களின் வாக்குரிமை பறிக்கப்படுகிறது. பீகார் மக்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியது ஜனநாயக படுகொலை. சொந்த மண்ணில் பிறந்து வளர்ந்த மக்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியதை விட பயங்கரவாதம் இருக்கமுடியுமா?.
பீகார் மக்களின் பலம்..
ராகுலும், தேஜஸ்வியும் பெறப்போகும் வெற்றியை தடுக்க முடியாத பா.ஜ.க., கொல்லைப்புறம் வழியாக வாக்காளர்களை நீக்குகிறது. இப்போது இந்தியாவே பீகாரை பார்த்துக்கொண்டிருக்கிறது. பீகார் மக்களின் பலம், ராகுலும், தேஜஸ்வியும்தான்.
ஜனநாயகம் காக்க...
இந்திய ஜனநாயகத்துக்கு ஆபத்து வரும்போதெல்லாம், அதற்காக போர்க்குரலை பீகார் எழுப்பியுள்ளது. இதுதான் வரலாறு. இப்போது அதே பணியை ராகுலும், தேஜஸ்வியும் பீகாரில் செய்கின்றனர். ராகுல், தேஜஸ்வி நட்பு, அரசியல் நட்பு அல்ல. உடன்பிறப்புகளின் நட்பு. ஜனநாயகம் காக்க ஒன்று சேர்ந்துள்ளனர். உங்களுக்கு வெற்றியை பெற்றுத்தரப்போவது இந்த நட்புதான். தேர்தலுக்கு முன்பே உங்கள் வெற்றி உறுதியாகிவிட்டது. அதனால்தான் இந்த வெற்றியை தடுக்க பார்க்கிறார்கள்” என்றார்
களவாடப்பட்ட ஒவ்வொரு வாக்கின் கனத்தையும் பீகார் மண்ணில் உணர முடிகிறது. அன்பு இளவல்கள் ராகுல் காந்தி, தேஜஸ்வி மற்றும் சகோதரி பிரியங்கா காந்தி ஆகியோருடன், மக்களின் வலியை எவராலும் தடுத்து நிறுத்த முடியாத ஆற்றலாக மாற்றும் வாக்கு அதிகாரப் பயணத்தில் நானும் இணைந்தேன். - முதல்வர் மு.க.ஸ்டாலின்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 6 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 12 months 1 day ago |
-
ஆம்பூர் கலவர வழக்கில் இன்று தீர்ப்பு
27 Aug 2025திருப்பத்தூர் : ஆம்பூர் கலவரம் வழக்கில் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட இருந்த தீர்ப்பு இன்று (ஆக.28-ம் தேதி) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
காசா மீதான இஸ்ரேல் தாக்குதல்: 5 பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட 20 பேர் பலி : இந்தியா கடும் கண்டனம்
27 Aug 2025புதுடெல்லி : காசாவின் கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனை மீதான இஸ்ரேல் தாக்குதல்களில் ஐந்து பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டது அதிர்ச்சியூட்டக்கூடியது என்றும், ஆழ்ந்த வர
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-08-2025.
27 Aug 2025 -
50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை முக்கிய ஆலோசனை
27 Aug 2025புதுடெல்லி : இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விவகாரம் தொடர்பாக நேற்று பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை நடத்தியது.
-
விநாயகர் சதுர்த்தி விழா: ஜனாதிபதி, பிரதமர் மோடி வாழ்த்து
27 Aug 2025புதுடெல்லி : இந்துக்களின் முதற்கடவுளான விநாயகரை வரவேற்கும் விதமாக, நாடு முழுவதும் நேற்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
-
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்: பொதுமக்களிடம் கருத்து கேட்கும் தேர்தல் ஆணையம்
27 Aug 2025டெல்லி : வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பாக பொதுமக்கள் தங்கள் கருத்தை தெரிவிக்குமாறு தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
-
அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பால் திருப்பூரில் உற்பத்தியை குறைக்க பின்னலாடை நிறுவனங்கள் முடிவு
27 Aug 2025சென்னை : அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு, பிற நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி ஆகும் பொருட்கள் மீது சரமாரியாக வரியை உயர்த்தி வருகிறார்.
-
பீகாரில் திறந்தவெளி வாகனத்தில் ராகுலுடன் பேரணியில் பங்கேற்றார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்
27 Aug 2025சென்னை : பீகாரில் திறந்தவெளி வாகனத்தில் ராகுலுடன் பேரணியில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
-
நெல்லையில் செப்.7 வாக்கு திருட்டு விளக்க மாநாடு : செல்வப்பெருந்தகை அறிவிப்பு
27 Aug 2025நெல்லை : திருநெல்வேலியில் வருகின்ற செப்டம்பர் 7 ஆம் தேதி வாக்குத் திருட்டு விளக்க மாநாடு நடத்தப்படும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.
-
ஆசிய கோப்பையில் விளையாடுவாரா? சூர்யகுமார் யாதவ்
27 Aug 2025டெல்லி : ஆசிய கோப்பையில் சூர்யகுமார் யாதவ் விளையாடுவாரா என்ற தகவல் ரசிகர்கள் மத்தில் பரவியுள்ளது.
-
தமிழகம் முழுவதும் கோவில்களில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகல கொண்டாட்டம்
27 Aug 2025சென்னை : தமிழகம் முழுவதும் கோவில்களில் நேற்று விநாயகர் சதுர்த்தி வழக்கமான உற்சாகத்துடன் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
-
பா.ஜ.க.வின் அதிகாரத்தை மக்கள் பறிப்பது நிச்சயம் : பீகாரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்
27 Aug 2025முசாபர்பூர் : 'பா.ஜ.க. எப்படி தேர்தல்களை கேலிக்கூத்தாக்கிவிட்டது என்பதை ராகுல் வெளிச்சம் போட்டு காட்டிவிட்டார்.
-
ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து அஸ்வின் ஓய்வு: ரசிகர்கள் அதிர்ச்சி
27 Aug 2025சென்னை : ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து அஸ்வின் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
-
இ.பி.எஸ். இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
27 Aug 2025சென்னை : சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முன்னாள் தமிழக முதல்வர் மற்றும் சட்டசபை எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்ட சம்பவ
-
உலக பாட்மிண்டன் சாம்பியன்: முதல் சுற்றில் சிந்து தகுதி
27 Aug 2025பாரிஸ் : உலக பாட்மிட்டன் சாம்பியன் போட்டியில் முதல் சுற்றுக்கு சிந்து தகுதி பெற்றார்.
-
கோடநாடு விவகாரம்: மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்
27 Aug 2025ஊட்டி : கோடநாடு பங்களாவை மாவட்ட நீதிபதி மற்றும் எதிர் தரப்பு வழக்கறிஞர்கள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய
-
ராஜஸ்தானில் தேர்வு மோசடி: 415 பேருக்கு வாழ்நாள் தடை
27 Aug 2025ஜெய்ப்பூர் : ராஜஸ்தானில் அரசு தேர்வுகளில் மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் முழுவதும் அரசு தேர்வுகளை எதிர்கொள்ள தடை விதிக்கப்பட்டது.
-
மக்கள் சக்திதான் பெரிது என்பதை பீகார் மாநில மக்கள் மீண்டும் ஒருமுறை நிரூபிக்க வேண்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
27 Aug 2025பாட்னா : மக்கள் சக்திக்கு முன் எந்த ஒரு சர்வாதிகாரியும் மண்டியிட்டுதான் ஆக வேண்டும் என்பதை பீகார் மக்கள் மீண்டும் ஒருமுறை நிரூபிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ
-
தோல் புற்றுநோயால் ஆஸி. முன்னாள் கேப்டன் பாதிப்பு
27 Aug 2025சிட்னி : ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டனான மைக்கேல் கிளார்க் புற்று நோயால் பாதிப்பு.
-
தென்மண்டல டென்பின் பவுலிங் போட்டியில் தமிழக வீரர் அசத்தல்
27 Aug 2025டெல்லி : தென்மண்டல டென்பின் பவுலிங் போட்டி, ஐதராபாத்தில் உள்ள கேம் எக்ஸ்ட்ரீம் பவுலிங் சென்டரில் நடைபெற்றது.
-
இந்தியா - பாகிஸ்தான் உட்பட 7 போர்களை நிறுத்தியுள்ளேன் : அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கருத்து
27 Aug 2025நியூயார்க் : அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் கொரிய அதிபருடனான சந்திப்பின் போது, இந்தியா - பாகிஸ்தான் இடையேயான சண்டை குறித்து டொனால்டு ட்ரம்ப் கூறியதா
-
புரோ கபடி லீக்: பெங்கால் வாரியர்ஸ் அணியின் கேப்டனாக தேவங்க் தலால் நியமனம்
27 Aug 2025மும்பை : புரோ கபடி லீக் போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் அணியின் கேப்டனாக தேவங்க் தலால் நியமனம் செய்யப்பட்டார்.
-
வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் டிரில்லியன் டாலர்களை கஜானாவில் சேர்த்துள்ளோம் : அதிபர் ட்ரம்ப் பெருமிதம்
27 Aug 2025வாஷிங்டன் : வெளிநாடுகள், பில்லியன்கள் அல்ல... டிரில்லியன் டாலர்களை எங்களுடைய கஜானாவுக்கு கொண்டு வந்து சேர்த்துள்ளன என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் சின்னர் வெற்றி
27 Aug 2025நியூயார்க் : அமெரிக்க ஓபன் டென்னிஸ் முதல் சுற்றில் சின்னர் வெற்றி பெற்றார்.
-
தமிழ்நாடு அணிக்காக ஆடப்போவதில்லை -விஜய் சங்கர்
27 Aug 2025டெல்லி : தமிழ்நாடு அணிக்காக விளையாடபோவது இல்லை என்று விஜய் சங்கம் கூறியுள்ளார்.