Idhayam Matrimony

பீகாரில் திறந்தவெளி வாகனத்தில் ராகுலுடன் பேரணியில் பங்கேற்றார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்

புதன்கிழமை, 27 ஆகஸ்ட் 2025      தமிழகம்
CM-1 2025-08-27

Source: provided

சென்னை : பீகாரில் திறந்தவெளி வாகனத்தில் ராகுலுடன் பேரணியில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

பீகாரில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மூலம் வாக்குகள் திருட முயற்சி நடப்பதாக பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தநிலையில் வாக்காளர் அதிகார யாத்திரை என்ற பெயரில், பீகாரில் ராகுல்காந்தி யாத்திரை நடத்தி வருகிறார். கடந்த 17-ம் தேதி சசாரம் நகரில் தொடங்கிய இந்த யாத்திரை 16 நாட்கள் நடைபெற்று பாட்னாவில் வருகிற 1-ம் தேதி நிறைவடைகிறது. இந்த யாத்திரை பேரணியை 1,300 கிலோ மீட்டருக்கு மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளார். இந்த யாத்திரையில் காங்கிரஸ் ஆளும் மாநில முதல்-மந்திரிகள், இன்டியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்று வருகிறார்கள்.

இந்த நிலையில், பீகாரில், ராகுல்காந்தி நடத்தி வரும் பேரணியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் பங்கேற்றார். திறந்தவெளி வாகனத்தில் ராகுல் காந்தியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரணியாக சென்றார். இதைபோல கனிமொழி எம்.பி. பிரியங்கா காந்தி, தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட இன்டியா கூட்டணி எம்.பி.க்கள் ராகுல் காந்தி பேரணியில் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து