எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : நாட்டில் உள்ள சிறு நிறுவனங்கள், விவசாயிகளை பாதுகாக்கும் விஷயத்தில் எவ்வளவு நெருக்கடிகள் வந்தாலும் கவலையில்லை’’ என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியாக தெரிவித்தார்.
உலக நாடுகளுக்கு அதிகபட்ச வரி விதித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்தியாவுக்கு 25 சதவீத வரியை விதித்தார். உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால், இந்தியாவுக்கு கூடுதலாக 25% வரியை அறிவித்தார்.
இதற்கான உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்திட்டார். இதையடுத்து அமெரிக்காவுக்கு இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு மொத்தமாக 50 சதவீத வரி விதிக்கப்படும். இந்த நடைமுறை நேற்று அமலுக்கு வந்தது.
இந்நிலையில், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற பேரணி மற்றும் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது: உலகளவில் தற்போது பொருளாதார ரீதியாக அரசியல் செய்வதில் ஒவ்வொருவரும் பரபரப்பாக இருக்கின்றனர். ஆனால்,அகமதாபாத் மண்ணில் இருந்து ஒன்று சொல்கிறேன். மகாத்மா காந்தியின் மண்ணில் இருந்து ஒன்று சொல்கிறேன்.
என்னுடைய சிறு நிறுவனங்களைச் சேர்ந்த சகோதர, சகோதரிகள், சிறிய கடை வைத்துள்ள சகோதர, சகோதரிகள், சிறு விவசாய சகோதர, சகோதரிகள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு மீண்டும் மீண்டும் உறுதி அளிக்கிறேன். உங்களுடைய நலன், உணர்வுகள்தான் இந்த மோடிக்கு முதன்மையானது.
எனது நாட்டில் சிறு நிறுவனங்கள் வைத்திருப்பவர்கள், விவசாயிகளைப் பாதுகாப்பதில் உறுதியாக இருக்கிறேன். அதற்கு தடையாக எத்தனை நெருக்கடி வந்தாலும், அவர்களின் வாழ்வாதாரத்தை விட்டுத்தர மாட்டேன். அவர்களுக்கு சிறு கஷ்டம் வருவதை என்னுடைய தலைமையிலான அரசு பொறுத்துக் கொள்ளாது. எத்தனை நெருக்கடி வந்தாலும், அவற்றை தாங்கும் வலிமையை அதிகரித்து கொண்டே இருப்போம் என்று தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


