Idhayam Matrimony

இ.பி.எஸ். இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

புதன்கிழமை, 27 ஆகஸ்ட் 2025      தமிழகம்
Eps 2024-12-13

Source: provided

சென்னை : சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முன்னாள் தமிழக முதல்வர் மற்றும் சட்டசபை எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படத்தியுள்ளது.

எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் வைத்த வெடிகுண்டு விரைவில் வெடிக்கும் என நேற்று மிரட்டல் விடப்பட்டு இருந்தது. இதனால், மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை செய்தனர்.

இதேபோன்று, கோவையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது. பாஸ்போர்ட் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளது என்றும் அது விரைவில் வெடிக்கும் என்றும் அதில் மிரட்டல் விடப்பட்டு இருந்தது.

இதுபற்றி தகவல் அறிந்து, வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார், மோப்ப நாயுடன் சோதனையில் ஈடுபட்டனர். பண்டிகை நாளான நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து இதுபோன்று விடப்பட்ட வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து