முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனமழை காரணமாக மகாராஷ்டிரவில் பள்ளிகளுக்கு விடுமுறை

வெள்ளிக்கிழமை, 29 ஆகஸ்ட் 2025      இந்தியா
School-holiday-Andhra

Source: provided

மகாராஷ்டிரா : மகாராஷ்டிரத்தின் லத்தூர் மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால், நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மராத்வாடா மாவட்டத்தில் உள்ள 60 வருவாய் வட்டங்களில் ஆறுகள் மற்றும் ஓடைகளில் நீர் மட்டம் உயர்ந்ததால், வியாழக்கிழமை இரவு வரை 29 வருவாய் வட்டங்களில் அதிக மழை பெய்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இதனிடையே இந்திய வானிலை ஆய்வு மையம் ஆகஸ்ட் 29(நேற்று) மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையத் தலைவர் வர்ஷா தாக்கூர் ஒன்று முதல் 12ம் வகுப்பு வரை உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஷிரூர் அனந்த்பால் மற்றும் அகமதுபூர் தாலுகாக்களின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கித்தவித்த பத்து பேரை பேரிடர் மேலாண்மை குழுக்கள் மற்றும் உள்ளூர் கிராமவாசிகள் மீட்டனர். அகமதுபூருக்கு ஒரு இராணுவக் குழுவும் வந்துள்ளது. கனமழையைத் தொடர்ந்து நாந்தேட் மற்றும் லத்தூரில் 2,200 க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து