முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மாவட்ட 10 தொகுதிகளிலும் அ.தி.மு.க. பிரச்சாரத்தில் திரண்ட பா.ஜ.க.வினர் : அ.தி.மு.க.வினர் மகிழ்ச்சி

வெள்ளிக்கிழமை, 5 செப்டம்பர் 2025      தமிழகம்
BJP 2024-03-05

Source: provided

மதுரை : மதுரை மாவட்டத்தின் 10 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் நடந்த ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரச்சாரப் பயணத்தில் பா.ஜ.க. உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும் அதிக அளவில் பங்கேற்றது அ.தி.மு.க.வினருக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

தமிழகத்தில் 2026-ல் சட்டப்பேரவைத் தேர்தல் நடை பெற உள்ளது. இதையொட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பழனிசாமி, ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் தமி ழகம் முழுவதும் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டுள்ளார். மேட்டுப்பாளையத்தில் பிரச்சாரப் பயணத்தை கடந்த ஜூலை 7-ல் தொடங்கிய பழனிசாமி, இதுவரை 120-க்கும் மேற்பட்ட பேரவைத் தொகுதிகளில் பிரச்சாரம் செய்துள்ளார். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் இந்த மாதம் 23-ம் தேதி எழுச்சி பயணத்தை பழனிசாமி நிறைவு செய்கிறார்.

மதுரை மாவட்டத்தில் 10 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. செப். 1-ல் திருப் பரங்குன்றம், திருமங்கலம் தொகுதிகளிலும், செப். 2-ல் மேலூர், மதுரை கிழக்கு, மதுரை வடக்கு தொகுதிகளிலும், செப். 3-ல் மதுரை மேற்கு, மதுரை மத்தி, மதுரை தெற்கு தொகுதிகளிலும், சோழ வந்தான், உசிலம்பட்டி தொகுதிகளிலும் பழனிசாமி பிரச்சாரம் செய்தார்.

மதுரை மாவட்டத்தில் 10 தொகுதிகளிலும் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டங்களில் அ.தி.மு.க.வினரைப் போல் கூட்டணி கட்சியினரும் அதிக அளவில் திரண்டனர். குறிப்பாக பா.ஜ.க.வினர் அதிக எண்ணிக்கையில் பங்கேற்றனர். பா.ஜ.க. பொதுச்செயலாளர் ராம.சீனிவாசன், செயலாளர் கதலி நரசிங்க பெருமாள், மாவட்டத் தலைவர்கள் மாரி சக்கரவர்த்தி, ராஜசிம்மன், சிவலிங்கம் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர். இதேபோல், தமிழ் மாநில காங்கிரஸ், பார்வர்டு பிளாக் கட்சியினரும் அனைத்து கூட்டங்களுக்கும் வந்திருந்தனர்.

பிரச்சாரக் கூட்டங்களில் பழனிசாமி பேசும்போது, கூட்டணி கட்சிகளின் மாவட்ட செயலாளர்கள், மாவட்ட பார்வை யாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளின் பெயர்களை குறிப்பிட்டார். இந்த நான்கு நாள் பயணத்தின்போது பழனி சாமி 3 நாள் மதுரையில் தனியார் ஹோட்டலில் தங்கினார்.

அப்போது மதுரை பா.ஜ.க. நிர்வாகிகள் பழனிசாமியை சந்தித்தனர். அவர், பா.ஜ.க. நிர்வாகிகளை மகிழ்ச்சியுடன் வரவேற்று அவர்களுடன் புகைப் படங்களும் எடுத்துக் கொண்டார். பழனிசாமியின் இந்த நடவடிக்கை பா.ஜ.க. உள்ளிட்ட அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்களுக்கு உற்சாகத்தை கொடுத்தது.

மதுரையில் நடந்த பிரச்சாரப் பயணக் கூட்டங்களில் பா.ஜ.க. உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் அதிக எண்ணிக்கையில் பங்கேற்றது, அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பா.ஜ.க. நிர்வாகிகள் கூறுகையில், தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற இரு கட்சியினரும் வேற்றுமைகளை கைவிட்டு ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். இதன் அடிப்படையில் பழனிசாமி பிரச்சாரக் கூட்டங்களில் பா.ஜ.க.வினர் அதிகளவில் பங்கேற்க வேண்டும் என கட்சி மேலிடம் கூறி யிருந்தது. அதன் அடிப்படையில் பழனிசாமியின் எழுச்சி பயணங்களில் பா.ஜ.க.வினர் அதிகளவில் பங்கேற்றனர். இதனால் இரு கட்சிகளின் கூட்டணி மேலும் வலுவடைவதுடன், தேர்தல் வெற்றிக்கும் உதவும் என்று கூறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து