எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, சாலையில் கிடந்த தங்க சங்கிலியை ஒப்படைத்த பெண் தூய்மைப் பணியாளரை நேரில் அழைத்து துணை முதல்வர் உதயநித ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.
சென்னை மாநகராட்சி அடையாறு மண்டலத்தில் தூய்மைப் பணியாளராக வேலை பார்ப்பவர் கிளாரா. இவர் நேற்று முன்தினம் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சாலையில் 1 பவுன் தங்கச் சங்கிலி கிடப்பதை பார்த்தார். தங்கம் இப்போது விற்கும் விலைக்கு அதை அவர் எடுத்துச் சென்றிருந்தால், சில மாத பணத் தேவையை அவரால் பூர்த்தி செய்திருக்க முடியும்.
ஆனால், நேர்மையின் அடையாளமாக விளங்கிய கிளாரா, அந்த தங்கச் சங்கிலியை போலீசிடம் கொண்டு போய் ஒப்படைத்தார். அவரது நேர்மையான செயலை கேள்விப்பட்டவுடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், குடும்பத்துடன் கிளாராவை வரவழைத்து பரிசுகள் வழங்கி பாராட்டினார். மேலும், இங்கிலாந்தில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் திரும்பி வந்ததும், தங்களை அழைத்து பாராட்டுவார் என்றும் கூறினார்.
இந்த நிலையில், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, தூய்மைப் பணியாளர் கிளாராவை அழைத்து ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கி பாராட்டினார். அப்போது, மாநகராட்சி கமிஷனர் ஜெ.குமரகுருபரன், இணை ஆணையர் ஜெயசீலன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


