Idhayam Matrimony

பொறுப்பு டி.ஜி.பி. நியமனம் ஏன்? தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி

திங்கட்கிழமை, 8 செப்டம்பர் 2025      தமிழகம்
Supreme-Court 2024-11-269

சென்னை, தமிழகத்தில் பொறுப்பு டி.ஜி.பி. நியமனம் ஏன்? என்று தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் டி.ஜி.பி.யின் பெயர்களை பரிந்துரை செய்யும்படி யு.பி.எஸ்.சி.யிடம், சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதிகள் அமர்வு கேட்டு கொண்டுள்ளது.

தமிழக சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக பணியாற்றிய சங்கர் ஜிவால் ஓய்வு பெற்ற நிலையில், தமிழக போலீஸ் துறையின் நிர்வாக டி.ஜி.பி. வெங்கடராமன்செய்யும்படி தமிழகத்தின் புதிய சட்டம்-ஒழுங்கு பொறுப்பு டி.ஜி.பி.யாக கடந்த ஆகஸ்டு 31-ந்தேதி நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், பொறுப்பு டி.ஜி.பி.யாக ஒருவரை நியமிப்பதற்கு எதிரான சுப்ரீம் கோர்ட்டின் 2018-ம் ஆண்டு முடிவை சுட்டி காட்டி வழக்கறிஞர் ஹென்றி திபாக்னே சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இது சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மற்றும் நீதிபதிகள் விநோத் சந்திரன் மற்றும் அதுல் சந்தூர்கார் ஆகியோர் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசுக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு வழக்காக எடுத்து கொள்ளும்படி மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதுபற்றிய விசாரணையில், பொறுப்பு டி.ஜி.பி.யாக ஒருவரை ஏன் வைத்து இருக்கிறீர்கள்? என நீதிபதி அமர்வு கேள்வி எழுப்பியது. இதற்கு அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, மத்திய நிர்வாக தீர்ப்பாயம் அதன் குழுவில் ஒருவரின் பெயரை சேர்க்க கூறுவதற்கு முன், டி.ஜி.பி.யாக ஒருவரை நியமிக்க முடியாது என கூறி அதற்கான ஆவணங்களை சமர்ப்பித்து உள்ளார்.

இதனை தொடர்ந்து, இந்த விவகாரத்தில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) விரைவாக பரிசீலனை செய்யும்படி நாங்கள் கேட்டு கொள்கிறோம். உங்களுடைய பரிந்துரையை பெற்ற பின்னரே, தொடர்புடைய மாநிலங்கள் டி.ஜி.பி.யாக ஒருவரை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க முடியும் என நீதிபதிகள் அமர்வு, தன்னுடைய உத்தரவில் தெரிவித்து உள்ளது. இதன்படி, டி.ஜி.பி.யின் பெயர்களை பரிந்துரை செய்யும்படி யு.பி.எஸ்.சி.யிடம் கேட்டு கொண்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து