Idhayam Matrimony

டெல்லி பயணமா..? - செங்கோட்டையன் விளக்கம்

திங்கட்கிழமை, 8 செப்டம்பர் 2025      தமிழகம்
Sengottaiyan 2023-04-20

Source: provided

கோவை : முக்கிய அறிவிப்பு எதையும் வெளியிட போவதில்லை என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க.வை ஒன்றிணைக்க எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கெடு விதித்த நிலையில், அவர் கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில், செங்கோட்டையன் திடீர் டெல்லி பயணம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக கோவை விமான நிலையம் வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;

நான் கோயிலுக்குச் செல்கிறேன். மன நிம்மதிக்காக ஹரித்வார் செல்கிறேன். கொஞ்சம் ரிலாக்ஸா இருக்க வேண்டி கோயிலுக்கு போகிறேன். ராமரை வணங்கிவிட்டு வர வேண்டியதுதான். அனைவரும் ஒன்றாக வேண்டும், கட்சி வளர வேண்டும் என்பதுதான் எனது நோக்கம். நல்லதுக்காக சொல்கிறோம். அதற்கு பொதுச்செயலாளர் பல்வேறு முடிவுகளை எடுக்கிறார். முடிவுகள் குறித்து கருத்துகள் சொல்ல இயலாது. காலம்தான் பதில் சொல்லும். எனது பயணத்தில் பா.ஜ.க. தலைவர்கள் யாரையும் சந்திக்கப்போவது இல்லை, இன்று முக்கிய அறிவிப்பு எதையும் வெளியிட போவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து