Idhayam Matrimony

பார்லி. மைய மண்டபத்தில் துணை ஜனாதிபதியாக நாளை பதவியேற்கிறார் சி.பி.ராதாகிருஷ்ணன் : ஜனாதிபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்

புதன்கிழமை, 10 செப்டம்பர் 2025      இந்தியா
Modi-CP 2025-08-18

Source: provided

புதுடெல்லி : பாராளுமன்ற மைய மண்டபத்தில் துணை ஜனாதிபதியாக நாளை பதவியேற்கிறார் சி.பி.ராதாகிருஷ்ணன். அவருக்கு ஜனாதிபதி திரெளபதி முர்மு பதவி பிரமாணமும், அரசியல் காப்பு உறுதிமொழியும் செய்து வைக்கிறார்.

துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று இருக்கும் சி.பி.ராதாகிருஷ்ணன் பா.ஜ.க. தலைவர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்.நேற்று காலையிலும் அவர் பா.ஜ.க. எம்.பி.க்கள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து நன்றி கூறினார். இதற்கிடையே அவருக்கு வாழ்த்து செய்திகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன.

சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதியாக பதவி ஏற்கும் விழா நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறும் என்று தெரிய வந்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பாராளுமன்ற அதிகாரிகள் செய்து வருகிறார்கள். துணை ஜனாதிபதி பதவி ஏற்பு பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடங்கி உள்ளது. பதவி ஏற்பு நேரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதும் அதற்கு ஏற்ப அழைப்பிதழ் வெளியிடப்படும்.

துணை ஜனாதிபதிக்கு ஜனாதிபதி திரெளபதி முர்மு பதவி பிரமாணமும், அரசியல் காப்பு உறுதிமொழியும் செய்து வைப்பார். இதைத் தொடர்ந்து சி.பி.ராதாகிருஷ்ணன் பாராளுமன்றத்தில் துணை ஜனாதிபதிக்கு ஒதுக்கப்பட்டுள்ள அறைக்கு சென்று பொறுப்புகளை ஏற்றுக் கொள்வார். தற்போது சி.பி.ராதாகிருஷ்ணன் மகாராஷ்டிரா மாநில கவர்னராக பதவி வகித்து வருகிறார். அந்த பதவியை அவர் ராஜினாமா செய்து கடிதம் அனுப்புவார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து