Idhayam Matrimony

தங்கம் விலையில் மாற்றமில்லை

புதன்கிழமை, 10 செப்டம்பர் 2025      தமிழகம்
Gold 2024-10-28

Source: provided

சென்னை : தங்கம் விலை நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.720 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.81 ஆயிரத்தையும் தாண்டி புதிய உச்சத்தை எட்டி இருந்த நிலையில் நேற்று தங்கம் விலையில் மாற்றமின்றி விற்பனையானது.

உலக நாடுகள் இடையிலான போர் பதற்றம், பொருளாதார மந்தநிலை, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வந்தது. இந்தநிலையில் அமெரிக்காவின் வர்த்தக போரால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்தது. பங்குச்சந்தைகளில் முதலீடு குறைந்து, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருகிறது. இதனால் தங்கம் விலை வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

கடந்த மாதம் (ஆகஸ்டு) 8-ந்தேதி ஒரு பவுன் ரூ.75 ஆயிரம் என்ற உச்சத்தை தொட்ட நிலையில், அதனைத் தொடர்ந்து பெரும்பாலான நாட்களில் விலை ஏறுமுகத்திலேயே இருந்து, இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை பதிவு செய்து கொண்டே இருக்கிறது. தொடர்ந்து நிலவும் பொருளாதார மந்தநிலை, முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் மீது அதிகளவில் திரும்பியுள்ளது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஒரு முடிவே இல்லாத உயரத்தை நோக்கி தங்கம் செல்கிறது. அந்த வரிசையில் நேற்றும் அதன் விலை அதிரடியாக உயர்ந்து இருந்தது.

அதன்படி, கடந்த 3 நாட்களுக்கு முன் ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 60-க்கும், ஒரு சவரன் ரூ.80 ஆயிரத்து 480-க்கும் விற்பனை ஆனது. நேற்று முன்தினம் நிலவரப்படி, கிராமுக்கு ரூ.90-ம், சவரனுக்கு ரூ.720-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 150-க்கும், ஒரு சவரன் ரூ.81 ஆயிரத்து 200-க்கும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.705-ம், சவரனுக்கு ரூ.5 ஆயிரத்து 640-ம் உயர்ந்திருந்தது.

இந்நிலையில் நேற்று தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி நேற்று முன்தின விலையிலேயே விற்பனை ஆனது. இதன்படி தங்கம் விலை ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 150-க்கும், ஒரு சவரன் ரூ.81 ஆயிரத்து 200-க்கும் விற்பனை ஆனது.  ஒருபுறம் தங்கம் விலையும், மற்றொரு பக்கம் வெள்ளி விலையும் ‘கிடுகிடு'வென அதிகரித்து வரும் சூழலில், நேற்று வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல், ஒரு கிராம் ரூ.140-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து