Idhayam Matrimony

அரசு பஸ்களில் பயன்படுத்தும் இலவச பஸ் பாஸ் திட்டம் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு

வியாழக்கிழமை, 11 செப்டம்பர் 2025      தமிழகம்
BUS 2024-08-25

Source: provided

சென்னை: அரசு பஸ்களில் பயன்படுத்தும் இலவச பஸ் பாஸ் திட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீட்டித்து அரசு போக்குவரத்துக் கழகப் பஸ்களில் பயணம் செய்யும் வகையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் வழங்கப்பட்டு வரும் கட்டணமில்லா பஸ் பயண அட்டைகளை பயனாளிகள் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து, பெற்றிட வழிவகை செய்யப்படும் என சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில், இத்திட்டத்தை செயல்படுத்தும் பொருட்டு, தமிழ்நாடு பயணியர் மற்றும் பொருள் போக்குவரத்துக்கழகம், தமிழ்நாடு மின் ஆளுமை முகமை நிறுவனத்துடன் இணைந்து, மாற்றுத்திறனாளிகள், கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள், அறிவுசார் திறன் குறைபாடு உள்ளவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், தமிழறிஞர்கள் மற்றும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உள்ளிட்ட பயனாளிகளுக்கு இணையதளம் வாயிலாக கட்டணமில்லா பயண அட்டைகளை பெறும் வசதி, முதற்கட்டமாக மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் கடந்த 7-ந்தேதி முதல் அமல்படுத்தப்பட்டது.

பயனாளிகள், இத்திட்டத்தின் வாயிலாக எவ்வித சிரமமுமின்றி தங்களது இருப்பிடத்திற்கு அருகாமையில் உள்ள அரசு இ-சேவை மையம் அல்லது https://www.tnesevai.tn.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து கட்டணமில்லா பஸ் பாஸ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

போதிய கால அவகாசம் தேவைப்படுகின்ற நிலையில் ஏற்கனவே பயனாளிகள் பயன்படுத்தி வரும் வருகிற 30-ந் தேதி வரை செல்லத்தக்க கட்டணமில்லா பயண அட்டைகளை, அக்டோபர் 31-ந் தேதி வரை, மேலும் ஒரு மாத காலத்திற்கு நீட்டித்து அரசு போக்குவரத்துக் கழகப் பஸ்களில் பயணம் செய்யும் வகையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து