எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : இரிடியம் மோசடியில் 30 பேரை சி.பி.சி.ஐ.டி.யினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்திய ரிசர்வ் வங்கியின் பேரில், போலியான ஆவணங்களை தயாரித்து, முறையாக பதிவு செய்யாமல் டிரஸ்ட்கள் நடத்தி, இரிடியம் விற்பனை செய்வதால் வெளிநாடுகளிலிருந்து கோடிக்கணக்கில் பணம் வருவதாக பொய்யாக கூறி, தமிழ்நாட்டை சேர்ந்த பல்வேறு மோசடி கும்பல்கள் பொதுமக்களிடமிருந்து லட்சகணக்கில் பணம் பெற்று, ஏமாற்றி வருவதாக கிடைக்கப்பெற்ற தகவலின் பேரில், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை தானாக முன்வந்து, தமிழ்நாடு முழுவதும் 13 வழக்குகளை பதிவு செய்து விசாரணை தொடங்கியது.
சேலம் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை பிரிவில், பதியப்பட்ட முதல் வழக்கில் 13 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் மேலும் 6 வழக்குகளிலும் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்யும் பொருட்டு, தமிழ்நாடு முழுவதும் 20 மாவட்டங்களில் மாபெரும் சோதனை மற்றும் தேடுதல் படலம் 12.09.2025ம் தேதி நடைபெற்றது.
இந்த சோதனையின் போது தமிழ்நாட்டில் 43 இடங்களிலும், வெளி மாநிலங்களில் 4 இடங்களிலும் என மொத்தம் 47 இடங்களில் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறையை சேர்ந்த 10 காவல்துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில் 35 காவல் ஆய்வாளர்கள், 12 சார்பு ஆய்வாளர்கள் அடங்கிய குழு, சோதனையிட்டு 5 மோசடி கும்பல்களை சேர்ந்த 5 முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
சென்னையை சேர்ந்த சுவாமிநாத், காட்பாடியை சேர்ந்த ஜெயராஜ், குடுமியான்மலையை சேர்ந்த ஏசி ரவிச்சந்திரன், மணப்பாறையை சேர்ந்த ஞானப்பிரகாசம், திண்டுக்கல்லை சேர்ந்த டெய்சி ராணி உள்பட 30 குற்றவாளிகளை சி.பி.சி.ஐ.டி. கைது செய்துள்ளது. குற்றவாளிகள் அனைவரும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கின்றனர். புலன்விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


