எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
துபாய் : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆகஸ்ட் மாத சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருது வென்றவர்கள் விவரங்களை அறிவித்துள்ளது. அதன்படி, ஆகஸ்ட் மாத சிறந்த வீரர் விருதை இந்தியாவின் முகமது சிராஜும், சிறந்த வீராங்கனை விருதை அயர்லாந்தின் ஓர்லா ப்ரெண்டர்காஸ்ட்டும் வென்றுள்ளனர்.
3 வீரர், வீராங்கனைகள்...
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. அதன்படி கடந்த ஆகஸ்ட் மாத சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகள் கொண்ட பரிந்துரை பெயர் பட்டியலை ஐ.சி.சி. அறிவித்திருந்தது.
சிராஜ் - மேட் ஹென்றி...
இதில் ஆகஸ்ட் மாத சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் 3 வேகப்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றிருந்தனர். அதன்படி இந்தியாவின் முகமது சிராஜ், வெஸ்ட் இண்டீசின் ஜெய்டன் சீல்ஸ் மற்றும் நியூசிலாந்தின் மேட் ஹென்றி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இதேபோல் சிறந்த வீராங்கனைக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் அயர்லாந்தின் ஓர்லா ப்ரெண்டர்காஸ்ட், நெதர்லாந்தின் ஐரிஸ் ஸ்வில்லிங் மற்றும் பாகிஸ்தானின் முனீபா அலி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
ப்ரெண்டர்காஸ்ட்டும்...
இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆகஸ்ட் மாத சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருது வென்றவர்கள் விவரங்களை அறிவித்துள்ளது. அதன்படி, ஆகஸ்ட் மாத சிறந்த வீரர் விருதை இந்தியாவின் முகமது சிராஜும், சிறந்த வீராங்கனை விருதை அயர்லாந்தின் ஓர்லா ப்ரெண்டர்காஸ்ட்டும் வென்றுள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


