Idhayam Matrimony

கனமழையால் வெள்ளம், நிலச்சரிவு: உத்தரகாண்டில் பலி 18 ஆக உயர்வு

புதன்கிழமை, 17 செப்டம்பர் 2025      இந்தியா
Suicide 2023 04 29

Source: provided

ராஞ்சி: உத்தரகாண்டில் வெள்ளம் நிலச்சரிவு ஏற்பட்டதில் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர். முதல்வர் புஷ்கர் சிங் தாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு இரவு முழுவதும் பெய்த கனமழையால் சாலைகள், வீடுகள் சேதம் அடைந்தன. டேராடூனில் நேற்று முன்தினம் அதிகாலை ஒரு பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதில் 5 பேர் பலியாகினர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் பேரிடர் மீட்பு படை நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. இந்தநிலையில் டேராடூன் மற்றும் சுற்றுப்பகுதிகளில் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டு பலியானோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 13 பேர் காணாமல் போயுள்ளனர். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.

டேராடூன் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் புஷ்கர் சிங் தாமி பார்வையிட்டு நிலவரத்தை ஆய்வு செய்தார். உத்தரகாண்டில் கனமழையை தொடர்ந்து ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமியிடம் பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கேட்டறிந்து மாநிலத்துக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் அவர்கள் உறுதி அளித்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து