Idhayam Matrimony

ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிராக இந்தியா மீது அதிக வரி விதிப்பு : மார்கோ ரூபியோ தகவல்

புதன்கிழமை, 24 செப்டம்பர் 2025      உலகம்
Marco-Rubio 2025-09-24

Source: provided

வாஷிங்டன் : அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளி இந்தியா எனத் தெரிவித்துள்ள அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, விளாடிமிர் புதினுக்கு எதிராக இந்தியா மீது ட்ரம்ப் அதிக வரிகளை விதித்ததாகத் தெரிவித்துள்ளார்.

ஃபாக்ஸ் டிவி நிகழ்ச்சியில், உக்ரைன் மீதான தாக்குதலை தொடர ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இன்னும் எவ்வளவு காலம் கொடுக்கப் போகிறார் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த மார்கோ ரூபியோ, “அதிபர் ட்ரம்ப் நடவடிக்கை எடுத்து வருகிறார். உதாரணத்துக்கு, இந்தியா எங்களுடைய மிக நெருக்கமான கூட்டாளி. இருந்தும், இந்தியாவுக்கு எதிராக ட்ரம்ப் அதிக வரிகளை விதித்தார். இது புதினுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியே.

இந்தியா மீது அதிக வரி விதித்துள்ள அதேநேரத்தில், நாங்கள் மீண்டும் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். நேற்று மீண்டும் அவர்களுடன் சந்திப்புகளை நடத்தினோம். ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்குவது தொடர்பாகனதாகவே இந்த சந்திப்புகள் இருந்தன” என தெரிவித்தார்.

ரஷ்யா மீது ட்ரம்ப் நேரடி நடவடிக்கைகள் எதையும் ஏன் எடுக்கவில்லை என்ற கேள்விக்கு பதில் அளித்த மார்கோ ரூபியோ, “ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் இந்தியா மற்றும் சீனாவுக்கு எதிராக மசோதா கொண்டுவரப்பட்டது. இந்த விவகாரத்தில், ஐரோப்பிய நாடுகளும் இணைய வேண்டும் என அதிபர் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். ரஷ்யாவிடம் இருந்து பல ஐரோப்பிய நாடுகள் இன்னமும் அதிக அளவில் இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்து வருகின்றன. இதுவும் ரஷ்ய போரை தொடர ஒரு காரணம்தான். உக்ரைனுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்களை அளிப்பதிலும் நாங்கள் அதிக முன்னேற்றத்தைக் கண்டுள்ளோம்.” எனக் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து