எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மும்பை: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. துணை கேப்டனான ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
2 போட்டிகள்....
இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆசியக் கோப்பை யில் விளையாடி வருகிறது. இதன்பிறகு இந்திய அணி சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் அக்டோபர் 2-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை நடக்கிறது. 2-வது டெஸ்ட் அக்டோபர் 10-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை டெல்லியில் நடைபெறுகிறது.
இந்திய அணி...
இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சுப்மன் கில் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். முன்னணி பேட்ஸ்மேனும், விக்கெட் கீப்பருமான ரிஷப் பண்ட் காயம் காரணமாக இந்த தொடரில் விளையாடாததால் ஜடேஜா துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து தொடரில் விளையாடிய கருண் நாயருக்கு இந்த தொடரில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. தமிழக வீரர் ஜெகதீசனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்திய அணி வீரர்கள்:
சுப்மன் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், சாய் சுதர்சன், தேவ்தத் படிக்கல், துருவ் ஜூரல் (WK), ரவீந்திர ஜடேஜா (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, அக்சர் படேல், நிதிஷ் குமார் ரெட்டி, ஜெகதீசன் (WK), முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


