எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தென்காசி, 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தின்கீழ் புதிய வீடு கட்டிக் கொடுப்பதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்ட நிலையில், இதற்கான ஆணையை மாணவியின் பெற்றோரிடம் தென்காசி மாவட்ட கலெக்டர் வழங்கியுள்ளார். மேலும், ஒழுகும் வீட்டில் அப்பா இருப்பாரே என்ற கவலை பிரேமாவுக்கு இனி வேண்டாம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழச்சியுடன் தெரிவித்துள்ளார்.
‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு'- தமிழ்நாட்டின் மாபெரும் கல்வி எழுச்சியின் கொண்டாட்டம்' என்ற பெயரில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று முன்தினம் மாலை மாபெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவின்போது பேசிய தென்காசி மாவட்டத்தை பிரேமா என்ற மாணவி பேசுகையில், “நான் கல்லூரியில் படிக்கும்போது ஹாஸ்டலில் தங்கியிருந்தேன். மழை நேரத்தில் நான் பாதுகாப்பாக இருப்பேன். ஆனால் எங்களது வீடு மழை நேரங்களில் ஒழுகும். மழை நேரங்களில் அப்பா, அம்மா எப்படி வீட்டில் தங்கி இருப்பார்கள் என எண்ணிக்கொண்டே இருப்பேன். விரைவில் அப்பா, அம்மாவுக்கு வீடு கட்டிக்கொடுக்க வேண்டும் என்பதே எனது ஆசை” என அந்த மாணவி பேசி இருந்தார்.
இந்த நிலையில், அந்த மாணவிக்கு 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தின்கீழ் புதிய வீடு கட்டிக் கொடுப்பதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். இதற்கான ஆணையை மாணவியின் பெற்றோரிடம் தென்காசி மாவட்ட கலெக்டர் வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:- ஒழுகும் வீட்டில் அப்பா இருப்பாரே என்ற கவலை பிரேமாவுக்கு இனி வேண்டாம். எத்தனையோ பேரின் எதிர்ப்பையும் மீறி உங்களைப் படிக்க வைத்த தந்தையிடம், முதல் மாதச் சம்பளத்தைத் தந்து நீங்கள் மகிழ்ச்சி அடைந்தீர்கள். உங்கள் கனவை நிறைவேற்றிய தந்தைக்குக் 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தின்கீழ் புதிய வீடு கட்டிக் கொடுப்பதற்கான ஆணையை வழங்கி நான் மகிழ்ச்சி கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


