முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ட்ரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து

வெள்ளிக்கிழமை, 26 செப்டம்பர் 2025      உலகம்
Trump 2023-04-13

வாஷிங்டன், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு நோபல் பரிசு அறிவிக்கப்படவில்லை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

உலக அளவில் பல்வேறு நாட்டு தலைவர்கள் தங்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைப்பதை ஒரு கவுரவமாக கருதுகின்றனர். இதற்காக அவர்கள் தீவிர முயற்சிகளும் மேற்கொண்டு வருகின்றனர். அதுவும் இந்த ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் இந்த விருதை பெற வேண்டும் என்பதில் மிகவும் ஆர்வமாக உள்ளார்.

தான் 2-வது முறையாக பதவி ஏற்றபிறகு இந்தியா-பாகிஸ்தான் சண்டை உள்ளிட்ட 7 போரை நிறுத்தி உள்ளேன். அதனால் எனக்கு தான் நோபல் பரிசு வழங்க வேண்டும் என வெளிப்படையாக கூறி வருகிறார். எப்படியும் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு தமக்கு கிடைக்கும் என்ற அதீத நம்பிக்கையில் இருந்து வருகிறார்.

உக்ரைன்-ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வர அவர் திட்டமிட்டு இருந்தார். இந்தநிலையில், ட்ரம்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பே இல்லை என வரலாற்று நிபுணர் ஆஸ்லே ஸ்லீன் தெரிவித்து இருக்கிறார். ட்ரம்பின் நடவடிக்கைகள் நோபல் பரிசு அளவுகோலுக்கு எதிரானது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அவர் நோபல் பரிசு வெல்ல மாட்டார். அவரது கருத்து எதிர்வினையை ஏற்படுத்தும், பரிசு வழங்கும் குழு சுதந்திரமாக செயல்படுகிறது என நோபல் பரிசு கமிட்டிக் குழுவை சேர்ந்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதனால் ட்ரம்பின் நோபல் பரிசு கனவு தகர்ந்து விடும் என்ற நிலை உருவாகி இருக்கிறது. 2025ம் ஆண்டுக்கான நோபல் பரிசு வரும் அக்.10 அன்று அறிவிக்கப்பட உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து