Idhayam Matrimony

அமெரிக்காவில் இருந்து இதுவரை2,417 இந்தியர்கள் வெளியேற்றம் : மத்திய அரசு தகவல்

வெள்ளிக்கிழமை, 26 செப்டம்பர் 2025      இந்தியா
Central-government 2021 12-

Source: provided

புதுடெல்லி : அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவி ஏற்றபிறகு பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இந்திய பொருட்களுக்கு மொத்தம் 50 சதவீத வரி விதித்தார். இந்தநிலையில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு வருகிற அக்.1-ம் தேதி முதல் 100 சதவீத வரி விதிக்கப்படும் என அறிவித்து உள்ளார். மேலும் அமெரிக்காவை மையமாக்கொண்டு உற்பத்தி ஆலை இல்லாத அனைத்து நிறுவனங்களுக்கும் இது பொருந்தும் என்றும் அமெரிக்காவிற்குள் மருந்து தொழிற்சாலை கட்டுமான பணிகளை தொடங்கினால் வரி விதிப்பு இல்லை என்றும் அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்து உள்ளார். 

இந்தநிலையில், வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- புதிய வரிகள் குறித்து சமூக ஊடகங்களில் நேற்று முன்தினம் ஒரு அறிவிப்பைப் பார்த்தோம். மருந்து மற்றும் பிற தயாரிப்புகள் குறித்த அறிக்கையை நாங்கள் பார்த்தோம், மேலும் தொடர்புடைய அமைச்சகமும் துறையும் இந்த விஷயத்தை உன்னிப்பாகக் கண்காணித்து அதன் தாக்கத்தை ஆராய்ந்து வருகின்றன.

இந்தியா தனது தேசிய நலன்களையும் பொருளாதார பாதுகாப்பையும் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுக்கும். ஜன.20 முதல் செப்.25 வரை 2,417 இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து