முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காத விஜய் எப்படி தலைவராக இருக்க முடியும்? - நயினார் நாகேந்திரன் கேள்வி

ஞாயிற்றுக்கிழமை, 28 செப்டம்பர் 2025      தமிழகம்
Narnar 2025-09-21

Source: provided

கரூர் : “கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க வராத விஜய் எப்படி தலைவராக இருக்க முடியும்? அவர் இங்கு இருந்து ஆறுதல் கூறியிருக்க வேண்டும், மக்களுடன் நின்றிருக்க வேண்டும். வெறும் ரூ.20 லட்சம் கொடுத்தால் போன உயிர்கள் மீண்டும் வருமா?” என தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார்.

கரூரில் நேற்று முன்தினம் த.வெ.க. தலைவர் விஜய் பிரச்சாரம் செய்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், கரூரில் நேற்று விஜய் பிரச்சாரம் செய்த இடத்தை பார்வையிட்டு பேசிய நயினார் நாகேந்திரன், “பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க வராதவர் எப்படி தலைவராக இருக்க முடியும்?

அப்பாவி மக்கள் இவ்வளவு பேர் உயிரிழந்திருக்கிறார்கள். அவர் களத்துக்கு வரவேண்டும் என்பதில்லை. அவர் இங்கு இருந்து ஆறுதல் கூறியிருக்க வேண்டும், மக்களுடன் நின்றிருக்க வேண்டும். வெறும் ரூ.20 லட்சம் கொடுத்தால் போன உயிர்கள் மீண்டும் வருமா? குறைந்தபட்சம் நேரில் வந்து ஆறுதலாவது சொல்ல வேண்டும்.

எல்லா தலைவர்களும் வந்து விசாரித்து ஆறுதல் சொல்லும்போது, அவர் களத்துக்கே இன்னும் வரவில்லை. உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து இது தொடர்பான வழக்கு பதிவு செய்து உடனடியாக விசாரிக்க வேண்டும். காவல் துறை இந்தக் கூட்டத்துக்கு உரிய பாதுகாப்பு கொடுக்கவில்லை, இது அவர்களின் கவனக் குறைவு. காவல் துறையை கையில் வைத்துள்ள முதல்வர் இதற்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டும். இதில் ஏதோ சதி நடந்துள்ளது, 3 முறை மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து