எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : கரூர் சம்பவத்தில் எடப்பாடி பழனிசாமி பொறுப்பற்ற முறையில் மக்கள் மத்தியில் வதந்திகளையும், கற்பனைக் கதைகளையும் பரப்பித் தனது சுய அரசியல் ஆதாயம் தேடுவது அரசியல் அநாகரிகம் என தமிழக மருத்துவத் துறை அமைச்சர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கரூர் சம்பவத்தில் தமிழ்நாடே துயரத்தில் இருக்க, பொறுப்புள்ள எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அதிலும் அரசியல் செய்து கொண்டிருக்கிறார். அரசியல் பேசுவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு எத்தனையோ வாய்ப்புகள் இருக்கிறது. பேரிடரிலுமா செய்ய வேண்டும்?
’’முந்தைய கூட்டங்களின் நிலையை ஆய்வு செய்து, அதற்கேற்ப முழு பாதுகாப்பை அரசு, காவல்துறை தந்திருக்க வேண்டும்’’ என்கிறார் பழனிசாமி. முந்தைய கூட்டங்களிலிருந்து ஆய்வு செய்த பிறகுதான் அதற்கு ஏற்ப கூடுதல் கட்டுப்பாடுகளையும் நிபந்தனைகளையும் காவல் துறை போட்டது. உடனே நீதிமன்றத்திற்குச் சென்று த.வெ.க.வினர் முறையிட்டார்கள்.
திருச்சி பிரச்சாரத்துக்குக் கடுமையான நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டதைச் சுட்டிக்காட்டி, த.வெ.க. துணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
த.வெ.க சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ’’எந்த வழியாக சென்னை திரும்ப வேண்டும். எத்தனை வாகனங்கள் வர வேண்டும் என்றெல்லாம் நிறைவேற்ற முடியாத நிபந்தனைகள் த.வெ.க.வுக்கு விதிக்கப்படுகிறது. கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் வரக்கூடாது என நிபந்தனைகளை விதிக்கிறார்கள். அவர்களை வர வேண்டாம் என நாங்கள் எப்படிச் சொல்ல முடியும்?’’ எனக் கேள்வி எழுப்பினார். விஜய் பிரசாரத்திற்கு வருபவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க அரசு எப்படியெல்லாம் முயன்றது என இதில் இருந்தே பழனிசாமி தெரிந்து கொள்ளலாம்.
இந்த விஷயங்கள் எதையும் அறிந்து கொள்ளாமல் எதிர்க் கட்சித் தலைவர் உளறிக் கொட்டியிருக்கிறார். காவல் துறை நிபந்தனைகள் எதனையும் த.வெ.க. பிரசாரத்தில் கடைப்பிடிக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால், அவர்கள் எல்லை மீறி நடக்க எதிர்க் கட்சித் தலைவரின் செயல்பாடுகளும் காரணமாக அமைந்துவிட்டது.
சாலைகளில் பிரசார வேனில் நடக்கும் கூட்டங்களில் இதுவரை தமிழ்நாட்டில் இப்படியொரு சம்பவம் நடந்த வரலாறு இல்லை. நடுரோட்டில் பஸ்ஸை நிறுத்தி கூட்டம் நடத்திவிட்டு, அவசரத்திற்கு அவ்வழியே ஆம்புலன்ஸ் வந்தால், அரசாங்கம் இடையூறு செய்கிறது என்று சொல்லி அங்கிருந்த தொண்டர்களை மட்டுமல்ல... ஒட்டுமொத்தத் தமிழகத்திற்குத் தவறான மன ஓட்டத்தைப் புகுத்தியவர் எடப்பாடி பழனிசாமிதான். “ஆள் இல்லாமல் ஆம்புலன்ஸ் வந்தால் ஓட்டுநரே நோயாளியாக அனுப்பப்படுவார்’’ என பழனிசாமி சொன்ன பிறகுதான் அவருடைய கூட்டங்களில் அடுத்தடுத்து ஆம்புலன்ஸ்கள் அடித்து நொறுக்கப்பட்டன. ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் தாக்கப்பட்டனர்.
பழனிசாமி போட்ட புதிய அரசியல் எண்ணத்திற்கு ஆட்பட்டுத்தான், த.வெ.க. கூட்டத்தில் ஆம்புலன்ஸ்கள் வந்தபோது அதை அனுமதிக்க மறுத்து, தாக்குதல் நடத்தினார்கள் த.வெ.க. தொண்டர்கள். தொண்டர்களை இந்த மனநிலைக்கு மாற்றிய பழனிசாமியும் தார்மீக பொறுப்பேற்க வேண்டியவர்தான்.
காவல்துறை விதித்த நிபந்தனைகளைக் கடைப்பிடிக்காத காரணத்தால் ஏற்பட்ட துரதிர்ஷ்டமான சம்பவம் இது. சம்பவம் நடந்த உடனேயே முதல்வர் அவர்கள் துரிதமாகக் களத்தில் இறங்கி நடவடிக்கை மேற்கொண்டார். அமைச்சர்களை கரூருக்கு அனுப்பினார்; உடனடியாகத் தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களையும், அதிகாரிகளையும் கலந்தாலோசித்து நிவாரண உதவிகளையும் விசாரணை ஆணையத்தையும் அமைத்தார். நள்ளிரவிலும் கரூருக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களுடன் உடன் இருக்கிறார். திமுகவின் அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. துபாயிலிருந்து துணை முதல்வர் உதயநிதி அவசரமாகத் தமிழ்நாடு திரும்புகிறார்.
தூத்துக்குடி துப்பாக்கி சம்பவத்தை டிவியில் பார்த்துக் கொண்டிருந்த பழனிசாமியை போல் இல்லாமல், உடனே களத்தில் இறங்கிச் செயல்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின். ஆனால், பழனிசாமியோ சிறிது கூட மனசாட்சியே இல்லாமல் முதல்வர் மீதும் காவல்துறை மீதும் பழி போடுகிறார்.
அனுமதி தராவிட்டால் அதிலும் அரசியல் செய்வது, அனுமதி அளித்தால் அந்த நிபந்தனைகளை மீறுவது, நிபந்தனைகளை மீறும் ரசிகர்களை ஊக்குவிப்பது என த.வெ.க. மோசமான அரசியலுக்கு மாறி வருகிறது. அதனை அதிமுக ஆதரிக்கிறது. நகருக்கு வெளியே பிரசாரத்தை வைத்துக் கொள்ளுங்கள் என்று காவல்துறை கேட்டுக் கொண்டால், முடியாது நாங்கள் கூட்டத்தைக் காட்டுவதற்கு முட்டுச் சந்துதான் தேவை என்று அப்பாவி பொதுமக்களை அலைக்கழிப்பதுதான் பழனிசாமி போன்றவர்களின் கேவலமான அரசியலாக இருக்கிறது.
த.வெ.க. கூட்டத்திற்கு முழுமையான பாதுகாப்பு காவல்துறையால் வழங்கப்பட்டது. அதனை த.வெ.க. தலைவர் விஜய்யே பிரசாரத்தில் ஒப்புக்கொண்டு பேசும் காட்சியை எல்லாம், வழக்கம் போலவே டிவியில் பார்க்கும் எடப்பாடி பழனிசாமி பார்க்கவில்லையா?
ஆளுங்கட்சியின் மீது பழி போடவும் அரசியல் செய்யவும் எந்தக் காரணமும் இல்லை என்றால் மக்களுடன் நின்று மக்களுக்குத் தேவையானதைச் செய்து கொடுத்து நல்ல அரசியலைச் செய்யுங்கள். அதை விடுத்து இதுபோன்ற மோசமான நாடகங்களை அரங்கேற்றி அவற்றுக்கு ஆளுங்கட்சியின் மீது பழி போட்டு அரசியல் செய்வது மனசாட்சியே கிஞ்சித்தும் இல்லாதவர்கள் செய்யும் செயல்.
மக்களின் மனங்களின் மீது அரசியல் செய்யுங்கள். பிணங்களின் மீது அல்ல. அரசியல் லாபத்திற்காக எதிர்க்கட்சித் தலைவர் வதந்தியைப் பரப்பும் நோக்கோடு பேசுவது தமிழ்நாடு அரசு இதுவரை கண்டிராதது. எடப்பாடி பழனிசாமி பொறுப்பற்ற முறையில் மக்கள் மத்தியில் வதந்திகளையும் , கற்பனைக் கதைகளையும் பரப்பித் தனது சுய அரசியல் ஆதாயம் தேடுவது அரசியல் அநாகரிகம்’ எனத் தெரிவித்துள்ளார்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 4 weeks ago |
-
கரூரில் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் பலி: சம்பவம் குறித்து முதல்வர் கேட்டறிந்தார்
27 Sep 2025கரூர், கரூரில் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 4 குழந்தைகள், 10 பெண்கள் உள்ளிட்ட 31 பேர் பலியான சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
கூட்ட நெரிசலில் சிக்கி பலர் பலி: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கரூர் விரைந்தார்
27 Sep 2025கரூர், கரூரில் நேற்று த.வெ.க.
-
கரூரில் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் பலி : சம்பவம் குறித்து முதல்வர் கேட்டறிந்தார்
27 Sep 2025கரூர், : கரூரில் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 4 குழந்தைகள், 10 பெண்கள் உள்ளிட்ட 31 பேர் பலியான சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
இலங்கைக்கு எதிரான ஆட்டம்: சாம்சனுக்கு இம்பேக்ட் வீரர் விருது
27 Sep 2025துபாய் : இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட சஞ்சு சாம்சனுக்கு இம்பேக்ட் வீரர் விருது வழங்கப்பட்டது.
-
கூட்ட நெரிசலில் சிக்கி பலர் பலி: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கரூர் விரைந்தார்
27 Sep 2025கரூர் : கரூரில் நேற்று த.வெ.க.
-
தமிழகத்தின் நிதி நிலைமை படுபாதாளத்தில் உள்ளது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
27 Sep 2025சென்னை : தமிழகத்தின் நிதி நிலைமையை படுபாதாளத்தில் உள்ளது என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
-
போபண்ணா ஜோடி முன்னேற்றம்
27 Sep 2025ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் டோக்கியோவில் நடந்து வருகிறது.
-
தசரா திருவிழாவை முன்னிட்டு மைசூருவில் டிரோன் பறக்க தடை
27 Sep 2025மைசூரு : தசரா திருவிழாவில் மைசூரில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
இறுதிப்போட்டியை போன்று இருந்தது: இலங்கையை வீழ்த்தியது குறித்து சூர்யகுமார் யாதவ்
27 Sep 2025துபாய் : இறுதிப்போட்டியை போன்று இருந்தது என்று இலங்கை வெற்றி குறித்து இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
-
17-வது ஆசிய கோப்பையை வெல்லூமா இந்தியா அணி? - பாகிஸ்தானுடன் இன்று மோதல்
27 Sep 2025துபாய் : 8 அணிகள் பங்கேற்றிருந்த 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது.
-
உலக பாரா வில்வித்தையில் தங்கம் வென்றார் ஷீத்தல் தேவி
27 Sep 2025குவான்ஜு : தென் கொரியாவின் குவான்ஜு நகரில் நடந்து வரும் உலக பாரா வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய இளம் வீராங்கனை ஷீத்தல் தேவி (18 வயது) வரலாறு படைத்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-09-2025.
28 Sep 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-09-2025.
28 Sep 2025 -
தமிழகத்தில் 7 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு
28 Sep 2025சென்னை : தமிழகத்தில் 7 நாட்கள் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
கூட்ட நெரிசலில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் : கரூரில் சீமான் பேட்டி
28 Sep 2025கரூர் : கரூர் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்றும், வருங்காலத்தில் இதுபோன்ற பேரிடர் நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என நாதக தலைமை ஒருங்கிணைப
-
100 ஆண்டுகளாக தொடர்ந்து அயராது தேச சேவை: ஆர்.எஸ்.எஸ்.க்கு பிரதமர் மோடி புகழாரம்
28 Sep 2025டெல்லி : பிரதமர் மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலியில் மான் கி பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சியில் உரையாற்றினார்.
-
விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேல்முருகன் வலியுறுத்தல்
28 Sep 2025சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மீதும், பிரசாரக் கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் மீதும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின்
-
ஆந்திரவில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆண்டுக்கு 15 ஆயிரம் ரூபாய் நிதியுதவி : முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு
28 Sep 2025அமராவதி : ஒவ்வொரு ஆண்டும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தலா ரூ.15 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு அறிவித்துள்ளார்.
-
கரூரில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு காங்கிரஸ் சார்பில் ரூ. 1 கோடி நிதியுதவி: செல்வப்பெருந்தகை
28 Sep 2025கரூர் : கரூரில் த.வெ.க.
-
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு - 3 பேர் பலி
28 Sep 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.
-
கரூர் சம்பவத்தில் கவனக்குறைவு: அரசு மீது பிரேமலதா குற்றச்சாட்டு
28 Sep 2025கரூர் : கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு த.வெ.க. தவறும், அரசின் கவனக்குறைவுமே காரணம் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: சி.பி.ஐ. விசாரணைக்கு ஓ.பி.எஸ். வலியுறுத்தல்
28 Sep 2025கரூர் : த.வெ.க. பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ.
-
ராணுவம், பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை: பாகிஸ்தானில் 17 பேர் சுட்டுக்கொலை
28 Sep 2025இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் ராணுவம், பயங்கரவாதிகள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 17 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
-
கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காத விஜய் எப்படி தலைவராக இருக்க முடியும்? - நயினார் நாகேந்திரன் கேள்வி
28 Sep 2025கரூர் : “கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க வராத விஜய் எப்படி தலைவராக இருக்க முடியும்?
-
கரூரில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் : வி.சி.க. தலைவர் திருமாவளவன் வலியுறுத்தல்
28 Sep 2025கரூர் : கரூரில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று வி.சி.க. தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.