Idhayam Matrimony

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: காவல்துறை மீது சசிகலா குற்றச்சாட்டு

ஞாயிற்றுக்கிழமை, 28 செப்டம்பர் 2025      தமிழகம்
Sasikala 2023-04-27

Source: provided

கரூர் : கரூர் கூட்ட நெரிசல் விபத்துக்கு போலீசாரின் மெத்தன போக்குதான் முதல் காரணம் என்று சசிகலா தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் நேற்று முன்தினம் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் 40 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், கரூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் பலர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

அவர்களை தொடர்ந்து, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், மா.கம்யூனிஸ்ட் பாலகிருஷ்ணன் ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்தனர். நாட்டையே உலுக்கிய கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக அரசியல் தலைவர்கள் பல்வேறு கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

அந்த வகையில், சசிகலா கூறியதாவது; கரூர் கூட்ட நெரிசல் விபத்துக்கு போலீசாரின் மெத்தன போக்குதான் முதல் காரணம். காவல்துறையை கையில் வைத்து இருக்கும் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் சும்மா வந்தோம் பார்த்தோம் என்று இருக்கக் கூடாது. உட்கார்ந்து வேலை செய்ய வேண்டும்” என்று  கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 day ago
View all comments

வாசகர் கருத்து