Idhayam Matrimony

ராணுவம், பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை: பாகிஸ்தானில் 17 பேர் சுட்டுக்கொலை

ஞாயிற்றுக்கிழமை, 28 செப்டம்பர் 2025      உலகம்
Pak 2024 11 20

Source: provided

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் ராணுவம், பயங்கரவாதிகள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 17 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு தலீபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். அதன்பிறகு பாகிஸ்தான் எல்லையோர பகுதியில் பயங்கரவாத தாக்குதல் அதிகரித்துள்ளது. இதற்கு ஆப்கானிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும் தெஹ்ரீக்-இ-தலீபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பே காரணம் என பாகிஸ்தான் குற்றம்சாட்டுகிறது.

எனவே பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதை தவிர்க்குமாறு பாகிஸ்தான் ராணுவம் ஆப்கானிஸ்தானை வலியுறுத்தியது. ஆனால் தலீபான்கள் இந்த குற்றச்சாட்டை மறுத்து வருகின்றனர். இந்தநிலையில் பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மாகாண எல்லை வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவியதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ராணுவ வீரர்கள் தர்ஷா கேல் பகுதிக்கு விரைந்தனர்.

பின்னர் உள்ளூர் போலீசாருடன் இணைந்து ராணுவமும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டது. அப்போது பயங்கரவாத முகாம் அருகே அவர்கள் நெருங்கினர். அவர்களை பார்த்ததும் அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் 3 ராணுவ வீரர்களுக்கு படுகாயம் ஏற்பட்டது.

இதற்கு பதிலடியாக பயங்கரவாதிகள் மீது ராணுவ வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 17 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்த துப்பாக்கி, வெடிமருந்து போன்றவையும் கைப்பற்றப்பட்டன. இதனையடுத்து பயங்கரவாதிகள் தப்பிச் செல்லாமல் இருப்பதற்காக அந்த பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து