எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
கரூர் : கரூர் சம்பவத்தில் முழுமையாக விசாரிக்க வேண்டும் என்பதால், இதுதொடர்பாக விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க மேலும் அவகாசம் தேவை என்று ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விசாரணை நடத்த, ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மாலை அருணா ஜெகதீசன் ஆணையம் சார்பில் ஐந்து பேர் கொண்ட குழுவினர், நெரிசல் ஏற்பட்டு பலர் உயிரிழந்த கரூர் வேலுச்சாமிபுரத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த பொதுமக்களிடம் நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தனர். தொடர்ந்து, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், நெரிசலில் சிக்கி காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களிடம் விசாரணை நடத்தினர்.
நேற்று 2-வது நாளாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை நடத்தினார். சம்பவ இடத்தில் பொதுமக்களிடம் அவர் விசாரணை மேற்கொண்டார். அவர் சம்பவம் நடந்த இடம், மருத்துவமனை, உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு சென்று விசாரித்தார்.
இதற்கிடையே, கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க அவகாசம் தேவை என அருணா ஜெகதீசன் கூறியுள்ளார். அவர் கூறுகையில், கரூர் கூட்ட நெரிசல் குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும், பாதிப்பு எப்படி ஏற்பட்டது என்பதை அறிய சம்பவ இடத்தில் மீண்டும் ஆய்வு செய்யப்பட உள்ளது. விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க கால தாமதம் ஏற்படும் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


