எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : பீகார் சட்டப்பேரைவை தேர்தலுக்கு 470 பார்வையாளர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. நிதிஷ்குமாரின் அரசின் பதவி காலம் நவம்பர் மாதத்தில் முடிவடைகிறது. இதையடுத்து, 243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டசபைக்கு நவம்பர் மாதம் 22-ம் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும். தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. அதன்படி, பீகார் சட்டசபை தேர்தலுக்கான தேதி அடுத்த வாரம் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல்களின்போது, தேர்தல் கமிஷனின் கண் மற்றும் காதுகளாக பொது, போலீஸ் மற்றும் செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்படுவது வழக்கம்.
அதன்படி, தேர்தல் மற்றும் சில மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கு 470 அதிகாரிகளை பார்வையாளர்களாக நியமிக்கப் போவதாக தேர்தல் கமிஷன் அறிவித்தது. அவர்களில் 320 பேர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள். 60 பேர் ஐ.பி.எஸ். அதிகாரிகள். 90 பேர் இதர பணியை சேர்ந்தவர்கள். அவர்களுக்கு அக்டோபர் 3-ந் தேதி, பணி குறித்த விளக்கம் அளிக்கப்படுகிறது. மறுநாள் (4-ம் தேதி) தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்ய தேர்தல் கமிஷன் அதிகாரிகள் பீகார் செல்கிறார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


