Idhayam Matrimony

விஜய் திட்டமிட்டு தாமதமாக வந்தார்: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் : எப்.ஐ.ஆரில் அதிர்ச்சி தகவல்

திங்கட்கிழமை, 29 செப்டம்பர் 2025      தமிழகம்
TVK-1 2025-09-29

Source: provided

சென்னை : அரசியல் பலத்தை காட்டவே விஜய் திட்டமிட்டு 4 மணி நேரம் தாமதமாக வந்தார் என்று கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக போலீஸ் எப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் இந்திய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் எப்.ஐ.ஆர்.பதிவு செய்தனர். இதனிடையே, கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் குறித்து காவல்துறை எப்.ஐ.ஆரில் பதிவு செய்துள்ள பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அதில், “விஜய் அரசியல் பலத்தை காட்ட திட்டமிட்டு 4 மணி நேரம் தாம‌தமாக வந்துள்ளார். மரக் கிளைகளிலும், கடை கொட்டகைகளிலும் தொண்டர்கள் ஏறி அமர்ந்தனர். மரக்கிளை முறிந்ததால் கீழே நின்றவர்கள் மீது விழுந்தனர். பல இடங்களில் நிபந்தனைகள் மீறப்பட்டன.

த.வெ.க. கட்சி நிர்வாகிகள் இதை எதையும் கண்டு கொள்ளவில்லை. மெயின்ரோடு வழியாக வந்து காலதாமதமாக, போக்குவரத்து பாதிப்பு ஏற்படுத்தி நிபந்தனையை மீறினர். த.வெ.க. நிர்வாகிகள் ஆனந்த், நிர்மல் குமார் ஆகியோரிடம் பலமுறை எச்சரித்தும் அவர்கள் அதை கேட்கவேவில்லை. இச்சம்பவத்தில், 2-வது குற்றவாளியாக ஆனந்த், 3-வது குற்றவாளியாக நிர்மல்குமார் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர். தண்ணீர், மருத்துவ வசதிகள் முறையாக இல்லை. கூட்ட நெரிசலால் ஏற்பட்ட அழுத்தத்தால் மக்கள் உடல் நிலையில் சோர்வு ஏற்பட்டது. கீழே விழுந்தவர்கள் மிதிபாடுகளில் சிக்கி மட்டுமே 11 பேர் உயிரிழந்தனர்” என்பது உள்ளிட்ட பல தகவல்கள் அதில் இடம் பெற்றுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து