எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஆயுத பூஜையை முன்னிட்டு சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஆயுத பூஜை பண்டிகை விடுமுறையையொட்டி, பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க ஏற்கனவே தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. இந்த நிலையில், மேலும் சில சிறப்பு ரயில்களை நேற்று அறிவித்துள்ளது. இது தொடர்பாக, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஆயுதபூஜை விடுமுறையையொட்டி, சென்னை எழும்பூர் - திருவனந்தபுரம் வடக்கு இடையே இன்று (30-ந் தேதி) சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இன்று இரவு 10.15 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண் 06075), மறுநாள் மதியம் 2.05 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையத்தை சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் இந்த சிறப்பு ரயில் (06076) திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையத்தில் இருந்து அக்டோபர் 5-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.30 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை வந்தடைகிறது.
19 பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரயில் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், பூதனூர், பாலக்காடு, திருச்சூர், அலுவா, எர்ணாகுளம் டவுன், கோட்டயம், செங்கனாசேரி, திருவல்லா, செங்கனூர், மாவேலிக்கரா, கயன்குளம், கொல்லம், வர்கலா ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இதேபோல், தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கு இன்று (30-ந் தேதி) முன்பதிவில்லாத பெட்டிகளை கொண்ட சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. தாம்பரத்தில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில் மறுநாள் அதிகாலை 3 மணிக்கு செங்கோட்டை ரயில் நிலையத்தை சென்றடைகிறது. முன்பதிவில்லாத இந்த சிறப்பு ரயில் 15 பெட்டிகளை கொண்டிருக்கும். மேலும், சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு மெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. சென்னை எழும்பூரில் இருந்து இன்று (30-ந் தேதி) இரவு 11.45 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு மெமு ரயில் மறுநாள் காலை 10.15 மணிக்கு மதுரையை சென்றடையும். முன்பதிவில்லாத பெட்டிகளை கொண்ட இந்த மெமு ரயில் மொத்தம் 12 பெட்டிகளை கொண்டிருக்கும். மேற்கண்ட ரயில்களில் சென்னை எழும்பூர் - திருவனந்தபுரம் வடக்கு ரயில்களுக்கான முன்பதிவு உடனடியாக தொடங்குகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


