Idhayam Matrimony

ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல்: பா.ஜ.க. நிர்வாகி மீது வழக்குப்பதிவு

திங்கட்கிழமை, 29 செப்டம்பர் 2025      இந்தியா
BJP 2025-09-29

Source: provided

திருச்சூர் : ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்த பா.ஜ.க. நிர்வாகி மீது வழக்கப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து வாக்கு திருட்டு தொடர்பாக பா.ஜ.க.வையும், தேர்தல் ஆணையத்தையும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். ராகுல் காந்தியில் குற்றச்சாட்டு தேர்தல் ஆணையம் மறுத்து வருகிறது. இந்த விவகாரத்தில் பா.ஜ.க. தலைவர்களும் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இதற்கிடையே பா.ஜ.க. செய்தி தொடர்பாளரும், கேரளா மாநில அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் என்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முன்னாள் மாநிலத் தலைவருமான பிரிந்து மகாதேவ், மலையாள டி.வி. விவாத நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசினார். அப்போது, ''ராகுல் காந்தியின் மார்பில் சுடவேண்டும்" எனப் பேசியுள்ளார். மகாதேவ் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால், பா.ஜ.க. மேலிடம் அவர் மீது எந்தவித நடவடிக்கையில் எடுக்கவில்லை.

இதனையடுத்து ராகுல் காந்தி மீது நேரடியாக கொடூரமான வகையில் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக அமித்ஷாவுக்கு காங்கிரஸ் கடிதம் எழுத்தியுள்ளது. மேலும் கொலை மிரட்டல் விடுத்த பா.ஜ.க. நிர்வாகிக்கு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்த பா.ஜ.க. நிர்வாகி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கேரள காங்கிரஸ் கமிட்டி செயலாளர் ஸ்ரீகுமார் சிசி அளித்த புகாரின் அடிப்படையில் பெரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் பிரிந்து மகாதேவை கண்டித்து கேரளா முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் நேற்று போராட்டங்களை நடத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து