Idhayam Matrimony

பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன்: ஆசிய கோப்பையை வழங்க மறுப்பு: ஐ.சி.சி.யிடம் இந்திய அணி முறையீடு

திங்கட்கிழமை, 29 செப்டம்பர் 2025      விளையாட்டு
BCCI 2025-08-22

Source: provided

துபாய் : ஆசிய கோப்பை வழங்கப்படாதது குறித்து ஐ.சி.சி.யிடம் இந்தியா முறையிடும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) செயலாளர் தேவ்ஜித் சைக்கியா தெரிவித்து உள்ளார். 

இறுதிப்போட்டியில்.... 

ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆசிய கோப்பையை கைப்பற்றியது. பாகிஸ்தானின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஆசிய கவுன்சில் தலைவரிடம் இருந்து ஆசிய கோப்பையை வாங்குவதில்லை என்று இந்திய அணி தெரிவித்திருந்தது. இதனால் கோப்பை மற்றும் பதக்கங்கள் இந்திய அணிக்கு கொடுக்கப்படவில்லை.

இந்தியா முறையீடு...

இந்நிலையில் ஆசிய கோப்பை மறுக்கப்பட்டது தொடர்பாக ஐ.சி.சி.யிடம் (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) இந்தியா முறையிடும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) செயலாளர் தேவ்ஜித் சைக்கியா தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-பாகிஸ்தானின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஆசிய கவுன்சில் தலைவரிடம் இருந்து ஆசிய கோப்பையை வாங்குவதில்லை என்று ஏற்கனவே நாங்கள் முடிவு செய்து விட்டோம். இதனால் ஒரு ஜென்டில்மேனாக அவர் பரிசளிப்பு விழாவில் இருந்து விலகி இருக்க வேண்டும்.

மறுக்கப்பட்டது குறித்து... 

ஆசிய கோப்பை எங்களிடம் வழங்க மறுக்கப்பட்டது தொடர்பாக நவம்பர் மாதம் நடைபெறும் ஐ.சி.சி. கூட்டத்தில் முறையிடப்படும். விரைவில் ஆசிய கோப்பை மற்றும் பதக்கங்கள் இந்தியாவிற்கு கொண்டு வரப்படும் என்று நம்புகிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து