எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடந்த 3 நாட்களுக்கு முன் இரவு உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவரது இதயத்தில் லேசான பாதிப்பு இருப்பதால், பேஸ் மேக்கர் கருவி பொருத்த அறிவுறுத்தினர். இதையடுத்து, அவருக்கு பேஸ் மேக்கர் பொருத்தப்படது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காங்கிரஸ் தலைவர் கார்கேவிடம், பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் நலம் விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மல்லிகார்ஜூன கார்கே விரைவில் குணமடைய வேண்டுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விரைவில் முழுமையாக குணமடைய வேண்டுகிறேன். அவர் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார் என்றும், தனது பணிகளை மீண்டும் தொடங்கத் தயாராக இருக்கிறார் என்றும் கேள்விப்பட்டு மகிழ்ச்சியடைந்தேன். என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


