Idhayam Matrimony

டி-20 கிரிக்கெட் பேட்டிங் தரவரிசை: அதிக புள்ளிகள் பெற்று அபிஷேக் சர்மா சாதனை

வியாழக்கிழமை, 2 அக்டோபர் 2025      விளையாட்டு
Abhishek-Sharma-2025-10-02

துபாய், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) டி20 கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் அதிக புள்ளிகளை பெற்ற வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் இந்திய வீரர் அபிஷேக் சர்மா.

அதிக புள்ளிகள்...

25 வயதான இடது கை பேட்ஸ்மேனான அபிஷேக் சர்மா, அண்மையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் ஏழு இன்னிங்ஸில் 314 ரன்கள் எடுத்தார். இந்நிலையில், ஐ.சி.சி. டி20 கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் அதிக புள்ளிகளை பெற்ற வீரர் என்ற வரலாற்று சாதனையை அவர் படைத்துள்ளார்.

926 புள்ளிகளுடன்.... 

இதற்கு முன்பு இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் டேவிட் மலான், ஐ.சி.சி. டி20 கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் அதிகபட்சமாக 919 புள்ளிகளை பெற்றதே சாதனையாக இருந்தது. இதை கடந்த 2020-ம் ஆண்டு மலான் எட்டியிருந்தார். இந்த சூழலில் தற்போது அதை தகர்த்துள்ளார் அபிஷேக். அவர் 926 புள்ளிகளுடன் ஐ.சி.சி. டி20 கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் இப்போது முதலிடத்தில் உள்ளார். இதே பிரிவில் மூன்றாவது இடத்தில் உள்ளார் மற்றொரு இந்திய வீரரான திலக் வர்மா. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து