முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரம் அருகே பேராவூரில் அரசு விழா: ரூ.738 கோடி மதிப்பிலான புதிய நலத்திட்ட பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து அடிக்கல்

வெள்ளிக்கிழமை, 3 அக்டோபர் 2025      தமிழகம்
CM-2-2025-10-03

ராமநாதபுரம், ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில் ரூ. 737.88 கோடி செலவிலான 109 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தும், 150 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், 50,752 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (அக்.3) ராமநாதபுரம் அருகே பேராவூா் பகுதியில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ. 176 கோடியே 59 லட்சம் செலவிலான 109 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, ரூ.134 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 150 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு துறைகளின் சார்பில் 50,752 பயனாளிகளுக்கு ரூ.426 கோடியே 83 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

முடிவுற்ற திட்டப்பணிகளின் விவரங்கள்:

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், ராமேசுவரம், பரமக்குடி, கிளியூர், ஆனந்தூர், கீழதூவல், முதுகுளத்தூர் வடக்கு, முதுகுளத்தூர் தெற்கு, மேலக்கொடுமலூர், நயினார்கோவில், சாயல்குடி ஆகிய இடங்களில் ரூ. 2 கோடியே 37 லட்சத்து 6 ஆயிரம் செலவில் வருவாய் ஆய்வாளர் குடியிருப்புகள் மற்றும் எஸ்.அண்டக்குடி ஊராட்சியில் கிராம நிருவாக அலுவலர் குடியிருப்பு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், நயினார்கோவில், கோவிலாங்குளம், பரமக்குடி ஆகிய இடங்களில் ரூ.10 கோடியே 19 லட்சத்து 50 ஆயிரம் செலவில் சமூக நீதி விடுதிகளை முதல்வர் திறந்து வைத்தார்.

பள்ளிக் கல்வித் துறை சார்பில், ரூ. 9 கோடியே 92 லட்சத்து 44 ஆயிரம் செலவில் நபார்டு திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ், தங்கச்சிமடம், எஸ்.கொடிக்குளம், நம்புதாளை, பெருங்குளம், தொருவளூர், கடலாடி ஆகிய அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைக் கட்டிடங்கள் மற்றும் தொண்டி, ஏர்வாடி ஆகிய இடங்களில் கிளை நூலகங்கள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், வேதாளை, செம்படையார்குளம், எல்.கருங்குளம், இருவேலி ஆகிய இடங்களில் ரூ.1 கோடியே 35 லட்சம் செலவில் ஆரம்ப சுகாதாரம் என ரூ. 12 கோடியே 67 லட்சத்து 87 ஆயிரம் செலவில் 54 முடிவுற்றப் பணிகள் என மொத்தம் ரூ. 176 கோடியே 59 லட்சத்து 32 ஆயிரம் செலவிலான 109 முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அடிக்கல் நாட்டப்பட்ட பணிகள்:

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், கடலாடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரூ. 8 கோடியே 47 லட்சம் மதிப்பீட்டில் மாணவியர்களுக்கு சமூக நீதி விடுதிக் கட்டிடம், பள்ளிக் கல்வித் துறை சார்பில், ராமநாதபுரம், மண்டபம், கடலாடி, திருப்புல்லானி, முதுகுளத்தூர், ஆர்.எஸ்.மங்கலம், கமுதி நயினார்கோவில், திருவாடானை, பரமக்குடி, போகலூர் ஆகிய இடங்களில் உள்ள தொடக்கப்பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.42 கோடியே 86 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைக் கட்டிடங்கள் மற்றும் கழிப்பறைக் கட்டிடங்கள்,

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் ரூ. 7 கோடியே 65 லட்சம் மதிப்பீட்டில் தொண்டி பேரூராட்சியில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார பொது சுகாதார அலகு மற்றும் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருதய உள்ளீடுருவி கதிரியக்க ஆய்வகக் கட்டிடம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில், திருவாடானையில் ரூ. 2 கோடியே 31 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பீட்டில் வட்ட செயல்முறை கிடங்கு கூடுதல் கட்டிடம்,

வணிகவரி மற்றும் பதிவுத் துறை சார்பில், வெளிப்பட்டிணத்தில் ரூ.11 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் மாவட்ட துணை பதிவுத்துறை அலுவலகம் மற்றும் சார்பதிவாளர் அலுவலகக் கட்டிடம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், மங்களக்குடி மற்றும் பெருநாழி ஆகிய இடங்களில் ரூ. 70 லட்சம் மதிப்பீட்டில் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்புகள், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில், முதுகுளத்தூர் மற்றும் இராமநாதபுரம் ஆகிய இடங்களில் ரூ. 3 கோடியே 65 லட்சத்து 78 ஆயிரம் மதிப்பீட்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் புனரமைக்கும் பணிகள் உள்ளிட்ட ரூ.134 கோடியே 45 லட்சத்து 47 ஆயிரம் மதிப்பீட்டிலான 150 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து