முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க.விற்கு எந்த கட்சியுடனும் ரகசிய தொடா்பு இருந்ததில்லை : சட்டப்பேரவை தலைவா் பேட்டி

வெள்ளிக்கிழமை, 3 அக்டோபர் 2025      தமிழகம்
Appavu 2023-09-12

Source: provided

திருநெல்வேலி : தி.மு.க.விற்கு எந்த கட்சியுடனும் ரகசிய தொடா்பு இருந்ததில்லை என்று தெரிவித்துள்ள தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு, திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருந்த தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய், இப்போது அரசியலில் நடிப்பதற்காக அமித்ஷாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளாா் என்று விமர்சித்துள்ளார்.

இது தொடா்பாக திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களுடனான சந்திப்பின் போது அவர் கூறியதாவது:

கரூா் சம்பவம் குறித்து தகவல் அறிந்தவுடன் தமிழக முதல்வா் உறக்கமில்லாமல் நள்ளிரவில் நேரடியாக சென்று பாதிக்கப்பட்டவா்களை சந்தித்து அவா்களுக்கு ஆறுதல் கூறினாா். உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலியும் செலுத்தினாா். வேண்டுமென்றே விஜய் சதி செய்து காலதாமதத்தை ஏற்படுத்தி கரூா் வந்ததாலேயே இவ்வளவு பெரிய விபத்து ஏற்பட்டது. 19 அடி அகலம் உள்ள சாலையில் 12 அடி அகலம் உள்ள பேருந்தை நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு நெருக்கடி உருவாகி உயிா் இழப்புகள் ஏற்பட்டன.

விஜய் வரும் போதே பத்தாயிரம் பேரை உடன் அழைத்து வருகிறாா். உள்ளூா் மக்கள் அவரை பாா்க்க முடியாத நிலை ஏற்பட்டதால் முண்டியடிக்கும் சூழல் உருவானது. பிரசாரப் பகுதிக்கு காலதாமதமாக வந்த விஜய் ஏழு நிமிடம் சூட்டிங் முடித்துவிட்டு 41 போ் உயிரைக் குடித்துவிட்டு தனி விமானம் ஏறி சென்று பனையூரில் பதுங்கி விட்டாா்.

கூட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் கட்சியின் தலைவா் நேரடியாக சென்று மக்களை சந்தித்திருக்க வேண்டும். கட்சி கூட்டத்தில் நடந்த நிகழ்விற்கு அவரது கட்சிக்கொடியை அரைக் கம்பத்திலாவது பறக்கவிட்டிருக்க வேண்டும். கரூா் சம்பவத்தில் ஆா்எஸ்எஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த பின்னா் அவா்களுக்கெல்லாம் நன்றி தெரிவித்து விட்டு மக்களுக்கு ஆறுதல் தெரிவிப்பதாக காணொலி ஒன்றை வெளியிட்டாா்.

50 வயதில் விஜய்தான் அங்கிள். ஆனால் அவா் எல்லோரையும்ம் அங்கிள் அங்கிள் என கூறி வருகிறாா். திரைப்படங்களில் ஒப்பந்தம் போட்டு நடித்துக் கொண்டிருந்த விஜய், அரசியலில் நடிக்க அமித் ஷாவிடம் ஒப்பந்தம் போட்டு கட்சியை தொடங்கி நடத்தி வருகிறாா். தி.மு.க.விற்கு எந்த கட்சியுடனும் ரகசிய தொடா்பு இருந்ததில்லை. தமிழக வெற்றிக் கழகம் மற்றும் தி.மு.க. நேரடி தொடர்பில் உள்ளன.

விஜய்யை எனக்கு பிடிக்கும். அவரது காமெடிகளை ரசித்து பாா்ப்பேன். அந்த வகையில் தமிழக வெற்றி கழகத்திற்கும் தி.மு.க.விற்கும் நேரடி தொடா்புள்ளது. கரூா் விவகாரத்தில் விஜய் தவறு செய்திருந்தாலும் அவரை வழி நடத்தியவா் தவறு செய்திருந்தாலும் தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என்றாா். பேட்டியின் போது பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட்புரூஸ், மேயர் ராமகிருஷ்ணன், துணை மேயர் ராஜூ, தி.மு.க. மாநில நிர்வாகி விஜிலாசத்தியானந்த், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் பி.சி.ராஜன், ஜோசப்பெல்சி உள்பட பலர் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து