Idhayam Matrimony

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா- பாக்., இன்று மோதல்

சனிக்கிழமை, 4 அக்டோபர் 2025      விளையாட்டு
Woman 2023-12-16

Source: provided

கொழும்பு : கொழும்பில் இன்று மாலை 3 மணிக்கு நடைபெறும் 6-வது லீக் போட்டியில் ஹர்மன்பிரீத் கவூர் தலைமையிலான இந்திய மகளிர் அணி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.

ரவுண்டு ராபின் முறை...

13-வது ஐ.சி.சி. மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ( 50 ஓவர்) இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது. 8 நாடுகள் பங்கேற்றுள்ள இந்த போட்டி தொடரில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் ரவுண்டு ராபின் முறையில் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

5-வது ஆட்டத்தில்... 

கவுகாத்தியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியா 59 ரன்னில் இலங்கையையும், 2-வது போட்டியில் (இந்தூர்) நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா 89 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்தையும், 3-வது ஆட்டத்தில்(கொழும்பு) வங்காளதேசம் 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானையும், 4-வது போட்டியில் (கவுகாத்தி) இங்கிலாந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவையும் தோற்கடித்தன. இன்று நடைபெறும் 5-வது ஆட்டத்தில் (கொழும்பு) ஆஸ்திரேலியா-இலங்கை அணிகள் மோதுகின்றன.

ஹர்மன்பிரீத் கவூர்... 

கொழும்பில் இன்று மாலை 3 மணிக்கு நடைபெறும் 6-வது லீக் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. ஹர்மன்பிரீத் கவூர் தலைமையிலான இந்திய மகளிர் அணி பாகிஸ்தானை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. கேப்டன் ஹர்மன்பிரீத் கவூர், தீப்தி சர்மா, அமன் ஜோத் கவூர்,ஹார்லீன் தியோல், தீப்தி சர்மா, சினே ராணா , ஸ்ரீ சரணி ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

வங்காளதேசத்திடம்...

பாத்திமா சனா தலைமையிலான பாகிஸ்தான் அணி முதல் ஆட்டத்தில் வங்காளதேசத்திடம் தோற்றது. அந்த அணி முதல் வெற்றிக்காக காத்திருக்கிறது. இரு அணிகளும் ஒருநாள் போட்டியில் இன்று மோதுவது 12-வது முறையாகும். இதுவரை நடந்த 11 ஆட்டத்திலும் இந்தியாவே வெற்றிபெற்றது. இன்றுயும் இந்தியாவின் வெற்றி நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து