Idhayam Matrimony

கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து த.வெ.க. சார்பில் ஆறுதல்

சனிக்கிழமை, 4 அக்டோபர் 2025      தமிழகம்
Vijay-2025-09-20

Source: provided

கரூர் : கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் உத்தரவின் பேரில், உயிர் இழந்தவர்கள் குடும்பத்தினரை முதன்முறையாக த.வெ.க. கரூர் மாவட்ட நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

கரூரில் கடந்த 27-ஆம் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். ஏற்கெனவே, உயிரிழந்தவர்கள் குறித்த விவரங்களை கரூர் மாவட்ட நிர்வாகிகள் சேகரித்து, அந்தப் பட்டியலை தமிழக வெற்றி கழகத்தின் தலைமைக்கு அனுப்பி வைத்த நிலையில், தற்போது பாதிக்கப்பட்டவர்களை விஜய் உத்தரவின் பேரில் த.வெ.க.வினர் நேரில் சந்தித்து வருகின்றனர். 

மேலும், விரைவில் கட்சியின் தலைவர் விஜய் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க இருப்பதாகவும், உரிய உதவிகள் செய்து தருவதாக உறுதி அளித்து வருகின்றனர். இந்த சந்திப்புகளின்போது த.வெ.க. மேற்கு மண்டலச் செயலாளர் பாலு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து