Idhayam Matrimony

ராமநாதபுரம் அருகே 250 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

சனிக்கிழமை, 4 அக்டோபர் 2025      தமிழகம்
Fisher-boat 2023-06-15

Source: provided

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட 250 கிலோ கடல் அட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் சக்கரக்கோட்டை பகுதியில் தடை செயப்பட்ட கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டி ருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர். சக்கரக்கோட்டை பகுதியில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 250 கிலோ எடைகொண்ட ரூ. 10 லட்சம் மதிப்பிலான கடல் அட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து கடல் அட்டைகளை கடத்த முயற்சி செய்த கும்பலில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கடல் வழியாக இலங்கைக்கு கடல் அட்டைகளை கடத்துவதற்காக ராமநாதபுரத்தில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் இந்த கடத்தலில் ஈடுபட்ட மேலும் 3 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து