எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில் கனமழையால் ஓசூர் உள்ள குடியிருப்பில் வெள்ளம் சூழ்ந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நேற்று முன்தினம் காலை முதலே கடும் வெயில், மக்களை வாட்டி வதைத்தது. இந்த நிலையில் மாலையில் திடீரென வான மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் மழை பெய்யத்தொடங்கியது. இதைத் தொடர்ந்து மாலை 6 மணி முதல் மழை பெய்யத் தொடங்கி, சிறிது நேரத்தில் கனமழை வெளுத்து வாங்கியது. பலத்த மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
மேலும் ஓசூர் பஸ் நிலையம், ராயக்கோட்டை ரோடு சர்க்கிள், பாகலூர் ரோடு சர்க்கிள், பாகலூர் ரோடு உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் குளம்போல் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். தொடர்ந்து இரவிலும் பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில், கிருஷ்ணகிரி ஓசூர் பகுதியில் நள்ளிரவில் 12 செ.மீ. அளவுக்கு மழை கொட்டி தீர்த்தது. கனமழை காரணமாக திப்பாலம் கிராமத்திற்கும் செல்லும் தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் பாய்வதால் ஊரிலிருந்து வெளியே வரமுடியாமல் மக்கள் தவித்தனர். மேலும், தொரப்பள்ளி என்ற பகுதியில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


